பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்த்தைகளால் சாடுவதும், இதனுல் மகிழ்வதுமாக வமபர்கள் இருந்தனர். கண்டபடி ஏசுவதிலும் அடங்காது, தாலித்தனமான செயல்களிலும் இறங்கினர். கூடைப் பந்தாட்டம் ஆடுவோர் எல்லோரும் பெண்மைக் குணம் தொண்டவர்கள் என்றும், ஆண்மைமிகுந்த அவர்கள் கதை கட்டிவிட்டனர். அக்கதைகளை நிரூபிக்கும் வகையாக, அடிக்கடி சச்சரவுகளையும் ஏற்படுத்தி, இடையருத இடையூறுகளைக் கொடுத்த வண்ணமாக இருந்தனர். என்றாலும் ஆட்டம் அதிக அளவில் வளர்ந்தது. வளர்ந்து கொண்டே இருந்தது.

மறைக்கப்பட்ட உண்மையும் அறமும் ஒருநாள் வெளி வருதல் போல, நன்மையையும் நல்லதையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் இந்த ஆட்டம், குழிப் பறித்தவர்களே குழிக்குள் தள்ளி விட்டு வளர்ந்தது. பாதை மாறித் துாற்றி யவர்கள் பணிந்தனர். பள்ளிகள், கல்லூரிகள், பொது நிலையங்கள் ஆட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டன. புரிந்து கொண்டதோடு அல்லாமல், மாண வர்களையும் மற்றவர்களையும் இதில் ஈடுபடுத்திப் பீடுற

விளங்கச் செய்தனர், ஆசிரியப் பெருமக்கள்.

பிறந்த மூன்று நான்கு ஆண்டுகளுக்குள்ளேயே கல்லூரி களின் போட்டிக்கான ஆட்டங்கள் ஒன்றாக மாறி, பல கல்லூரிகளுக்கிடையே (University) நடத்தப்பெறும் ஆட்டமாகின்ற நிலைமைக்கும் வந்தது. மாநிலப் போட்டி யும் நடைபெறுகின்ற அளவுக்கு உயர்ந்தது. முதல் உலகப் பெரும் போருக்குள் ஆட்டம் நாடெங்கும் பரவி நின்றது. “இதை ஆடாத நாடுகளே இல்லை” எனக் கூறும் அளவிற்குத் தொடர்ந்து செழித்து, எல்லா இடங்களிலும் காலூன்றி நின்றது கூடைப் பந்தாட்டம்.

செடி ஒன்று பூத்து, மலராகி, காயாகி கனிதரும் வேளே யில், நீர் ஊற்றுவாரும் நின்று காப்பாற்றுவாரும் இன்றி