பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

நிலைமாறிப் போனது போன்று, இந்த ஆட்டத்திற்கு அடித் தளமாக இருந்து காத்த பெரிய மனிதர்களில் பலர் இறந்து படவே, தாயற்ற மழலைபோல் ஆட்டம் தத்தளிக்க ஆரம்பித்தது. தலைவன் இல்லா ஊரில் தடியெடுத்தவர்கள் சொல்வதுதான்சட்டம்போல,ஆட்டத்தை ஆடுவோர்களில் பலர்,தாங்கள் விரும்பிய முறைகளிலே விதிகளை அமைத்துக் கொண்டு ஆட ஆரம்பித்தனர்.

குழம்பிய இந்த நிலை மாற, கொண்டிருந்த கொள்கை மயக்கம் தீர, பல சங்கங்கள் (Clubs) ஒன்று சேர்ந்தன. பல சிக்கல்களுக்கிடையே துணிந்து நின்று, 1915-ஆம் ஆண்டு பொதுவான சில விதிகளை அமைத்தனர். இந்த சீரமைப்பே கூடைப் பந்தாட்டத்தின் தலைவிதியை நிர்ணயித்துத் திடப் படுத்தி, மிகுந்த வலிமையுள்ளதாக மாற்றியது.

கூடைப் பந்தாட்டத்தின் விதிகள் முதன் முதலாக (Triangle) GT6%rp பத்திரிக்கையில், 1891ஆம் ஆண்டு வெளி வந்தன. பிறகு 1915ஆம் ஆண்டு ஒருசில விதிகள் வரை யறுக்கப்பட்டன. ஆரம்ப நாட்களில் கைக்கொள்ளப்பட்ட ஒரு சில விதிகள், இன்றும் மாருமலே இருந்து வருகின்றன. அத்தகைய அற்புதமான விதிகளை இங்கே கொடுத்திருக் கிருேம். படியுங்கள்.

1. பந்தை வைத்திருக்கும் ஆட்டக்காரர் கையில் பந்தை வைத்த வண்ணம் நடந்தோ அல்லது ஒடியோ முன்னேறக் கூடாது.

2. ஆட்டக்காரர்களின் தலைகளுக்கு மேலே எட்டா தவாறு கூடை (இன்று வளையம்'(Ring) பொருத்தி வைக்கப் பட்டிருந்தது.

2. முரட்டுத்தனமான செய்கைகள் நீக்கப்பட்டு, ஒருவர் மேல் ஒருவர் மோதிக் கொள்வது (Personal contact) தவிர்க்கப்பட்டிருந்தது.