பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

பரந்த அளவிலே தேசிய வெற்றிப் போட்டி (National Championship) டில்லியிலே நடத்தப் பெற்றது. இந்த ஆட்டத்தைக் கட்டுப்படுத்திக் காக்கும் கழகமாக 1950 ஆம் ஆண்டு வரை இந்திய ஒலிம்பிக் கழகமே இருந்து வந்தது.

=

மறைந்த தலைவர் C. C. ஆபிரகாம் (Abraham) அவர்கள் தலைமையில் தேசிய அளவிலே இந்தியக் கூடைப் Lgrrl __# Gypsib @ gr spi(Basket ball Federation of India) 1950ஆம் ஆண்டு ஏற்படுத்தப் பட்டது. பெண்களும், மாணவர்களும் இன்னும் தொழிலாளர்களுங் கூட இந்த ஆட்டத்தில் அதிக உற்சாகங் காட்டத் தொடங்கினர்.

இதன் பயனுக 1955ம் ஆண்டு தேசீயக் கூடைப் பந்தாட்டப் போட்டி ஒன்று, மாணவர்களுக்காக நடத்தப் பெற்றது. இந்தப் போட்டி, மாணவர்களின் எதிர்கால எழுச்சிக்கு சிறந்த தூண்டுகோலாக அமைந்தது. தற்போது இந்தியாவின் தேசிய பந்தாட்டப் போட்டிக்கான பரிசு ‘GTl | Guri@ 606060uul l_TG” (Edward william Dodd) என்பவரின் நினைவுக் கோப்பையாக இருந்து வருகிறது.

இன்று கூடைப்பந்தாட்டம் இந்தியாவில் உள்ள எல்லா பட்டி தொட்டிகளிலும் விளையாடப்பட்டு வருகிறது. அதை ஆடாத ஊரே இல்லை என்ற அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், உலக நாடுகளுடன் அந்த வளர்ச்சியை ஒப்பிடும்போது, அந்த வளர்ச்சி மிகவும் சாதாரணமானது. மற்ற நாடுகளைப் போட்டியிட்டு வெல்லும் அளவுக்கு நாம் இன்னும் சிறப்பாக ஆற்றல் பெறவில்லை யென்றாலும், ஆட்டக்காரர்களை உண்மையாக ஊக்குவித்து, நல்ல முறையில் உற்சாகப்படுத்தி ஆடச் செய்து, ஆட்டத்தை மேம்படுத்துவது அரசினரின் கடமையாகும். அதல்ை ஆட்ட நிலையில் வளம் பெருகும்.