பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, பந்தை வெளியே தூக்கி எறிந்து காலத்தை வீணுக்குவது போன்ற பண்பற்ற செய்கைகளும்; எதிரே ஓடி வருகின்ற எதிர்க் குழு ஆட்டக்காரரின் கண்களுக்கு அருகில் கையை வைத்து வீசி மறைக்கும் தன்மையில் இடையூறு செய்வதும்; நடுவரையும் மற்றும் ஆட்டம் ஒழுங்குற நடத்துபவர்களையும் மரியாதையின்றிப் பேசுவதும்; அவர்களிடம் ஒழுங்கின்றி நடந்து கொள்ளுதலும்; தனியார் குற்றம் அவர் மேல் சுமத்தப்படும் பொழுது ஒழுங்காக கையை உயர்த்தி தன்னைக் காட்டிக் கொள்ளாது இருப்பதும்; தன்னுடைய ஆடும் எண்ணை (Number) நடுவரிடமும் குறிப்பாளரிடமும் (Scorer) சொல்லிக் கொள்ளாமல் மாற்றுவதும்; “மாற்றாளாக உள்ளே வரும் பொழுதும், வெளியே போகும் பொழுதும் நடுவரிடமும் குறிப்பவரிடமும் அறிவிக்காதிருத்தலும் போன்ற தவறுகள், முதல் முறை நடுவரால் எச்சரிக்கப்படும். மீண்டும் செய்தால் தனி நிலைத் தவறு சாட்டப்படும். பின்னும் தவறைத் தொடர்ந்தால், அவர் ஆட்டத்தை விட்டே வெளியேற்றப் படுவார்.

“தனி எறி நடந்த பிறகு, மையக் கோட்டுக்கு அருகே பக்கவாட்டில் வெளியே இருந்து, தனிஎறி எடுத்த குழுவின ரால் உள்ளெறிதலைச் செய்ய, ஆட்டம் தொடங்குகிறது. தனி எறி வெற்றி பெற்றாலும் பெருவிட்டாலும் மேலே

கூறியவை காரணமல்ல.

53555i) (Blocking)

பந்தோடு ஒருவர் முன்னேறும்பொழுதும்; அவர் வளையத்திற்குள் பந்தை எறிய முயற்சிக்கும் பொழுதும் மறு குழுவினர் தடுத்து நிறுத்த முயல்வது, மிக மிக அவசியமாகும். அதற்கான வழிகளை, விதிகளின்படி தடுப்பதுதான் முறையான ஆட்டம். முறை நீங்கிய