பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவை. அத்துடன் திறன் நுணுக்கங்களில் ஆழ்ந்த அனுபவமும், அதிகப் பயிற்சியும் வேண்டுவது சாலச்

சிறந்தது.

குறிப்பாக, பந்துடன் ஒடல், ஒடும்பொழுதே நிற்றல், பந்தை லாவகமாகப் பிடித்தல், பாங்கருக்கு (Team player) சரியாக வழங்குதல், இடம் பார்த்து வீசுதல், குறிநோக்கி விசுதல் போன்ற திறமைகளை நல்லபடி அறிந்து, தெளிந்து செயல் மூலம் காட்டிெைலாழிய, விளையாட்டில் தேர்ச்சி யுள்ளதாகக் கருதமுடியாது.

பயிற்றுவிக்கும் வல்லுநர்கள் (Coaches) இந்த ஆட்டத்தினைக் கற்றுத்தர எந்த நுண்திறனே முதலில் கையாளுவது என்பதில் மாறு படுகின்றனர். கருத்து வேறுபாடு எதுவாக இருந்தாலும், ஆட்டத்தின் முழு நோக்கம் வளையத்திற்குள் பந்தை எறிவதுதான். எனவே திறன் எளிதால்ை, ஆடும் திறன் உடனேவரும். அதற்கான ஒரு சில நுணுக்கங்களைக் கீழே காண்போம்.

1. 35T’ 3p331 (Foot work)

உடலைக் கட்டுப்படுத்தி ஒரு நிலையில் இருத்தித் திடமாக நிற்க, கால்களுக்கு வலிவை உண்டாக்குவது நமக்குத் தேவையான திறமையாகும். வேகமாக ஒடுவதும் வேண்டிய பொழுது உடனே நிற்பதும், எதிர்க் குழுவினரிடம் உள்ள பந்தை ஏய்த்துப் பிடுங்குதற்கு எற்ற நிலையிலிருப்பதும் ஆகிய நேரங்களில், கால்களின் திறன் மிகுதியாகத் தேவைப் படுகிறது.

பந்தை எடுத்துக் கொண்டு முன்னேறி வரும்பொழுது சிறைக்கப் பட்டால், காலெடுத்து மாற்றி வைத்து, நோக்கத்தை (Aim) திசையைத் (Direction) திடீரென சிாற்றுதல், இவற்றால் எதிரிகளை ஏமாற்றக் கால்திறன்