பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 பந்தாட்டம் s)L g

எல்லோராலும் எளிதாகப் பயன்படுத்தப் படுகிறது. பார்புக்கு நேராக வைத்திருக்கும் பந்தை, இரண்டு கைகளாலும் முன்னுேக்கி வேகமாகத் தள்ள வேண்டுவது தான் முன் தள்ளி மற்றல்’ என்று கூறப்படுகிறது.

பந்தை முன்னேக்கித் தள்ளும் பொழுது, சம அளவில் இருக்கும் இருகால்களில் ஒன்றை எடுத்து முன்னல் வைத்து, உடலை முன்னேக்கித்தள்ளி கைகளைப் பந்தோடு மார்புக்கு முன்னே இருத்தி வேகமாக முன்புறம் தள்ள வேண்டியது தான் சரியான முறையாகும்.

(g)],) Gudo) 13, IDT no (Over the Shoulder pass)

துரத்திலிருந்து பந்தை எறிவதற்கும், வேகமாகவும் வலிமையாகவும் தன் குழுவினரை நோக்கி எறிந்து மாற்று வதற்கும், இந்த மாற்று முறை நன்கு பயன்படக் கூடியதாகும்.

பந்தைத் தோளுக்குமேல் வலது காதுக்கு அருகாமையில் கொண்டு வந்து, சிறிது உயர்த்தி பின்புற மாகக் கொஞ்சம் கொண்டு சென்று, பின்னர் முன் நோக்கி வேகமாகத் தள்ளவேண்டும். (இடது கையர்களுக்கு இதே போல் இடது பக்கம் செய்ய வேண்டும்.)

பந்து கையை விட்டுச் சென்ற பிறகும் பந்தை தொடர்ந்து செல்வது போல், கடைசி வரை கை நீட்டப் படவேண்டும். அப்பொழுது தான் பந்து விரைவாகச் செல்லும். அந்த நிலையில் அங்க அசைவுகளும் (Bodity Movements) ஆட்டமும் காண்பதற்கு அழகாய் இருக்கும்.

பந்தைத் தோளுக்குமேல் வைத்திருக்கும் பொழுது, மறு கையையும் அதற்கு ஆதரவாக வைத்துக்கொள்ளலாம்.

வி. வ. வ.-6