பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடைப் பந்தாட்டம் 9 I

கீழ் மாற்றலில் பந்து கை மாறிய பிறகும், இரண்டு கைகளும் பந்துடன் சென்று, நீண்டு நிற்கும். ஒரு கைக் கீழ் மாற்றலில் பந்து, இரு கைகளாலும் இடுப்பளவில் பிடிக்கப்பட்டு, எறியும் நிலைவரை கூடவந்து, பின்னர் ஒரு கை மட்டும் பந்துடன் தொடர்ந்து வந்து நீண்டு நிற்கும்.

(உ) துள் ளு முறை ldi i n (Bounce Pass)

பந்தை நேராக எறிந்தோ அல்லது முன்னுல் தள்ளியோ கைகளுக்கு மாற்றித் தராமல், தரையில் மோதித் துள்ள விட்டு, தன் குழுவினருக்கு சரியாக சேரும் வகையில் மாற்றுதல்தான் துள்ளு முறை மாற்றல்’ எனப்படும். மற்ற எல்லா வகை மாற்றங்களும் எதிர்க் குழுவினரிடத்தில் செல்லுபடியாகாத பொழுது, ஏதும் செய்ய முடியாத நிலையில், பந்தைக் கீழே அடித்து, அது துள்ளி மேலே வரும் பொழுது, தன் குழுவினரைப் பிடித்து எடுத்துக்கொள்ளச் செய்யும் முறையே இந்த முறை.

மார்புக்கும் (Chest) கீழே தாழ்ந்த அளவில் இரு கைகளாலும் பந்தைப் பிடித்து, தரையில் மோதித் துள்ள விட்டு, கை மாற்றுதலே சரியான முறை. உயர்ந்த அளவிலே வைத்துப் பந்தைக் கீழே அடித்துக் குதிக்கவிட்டுக் கை மாற்றினுல், என்ன என்று கேட்கலாம். மேலேயிருந்து கீழே விழுகின்ற ஒரு பந்தானது, கொஞ்சம் உயரமாக எழும்பிக் குதிக்கத் தானே செய்யும்! அப்பொழுது எதிர்க் குழுவினர் ஒடி வந்து, பந்தைப் பிடித்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப் பத்தை நாமே அளித்தவராகின்றாேமே!

அதற்காகவே குறைந்த அளவில் உயரம் இருந்தால், குறைந்த அளவே பந்தும் உயரும். இன்னும் உயரே எழும்பி வருகிற பந்தைப்பிடிக்கக் காலதாமதமும், அப்படிப் பிடித்து விட்டாலும் எதிர்க் குழுவினர் நம்மைத் தடுக்கத் தயார் செய்து கொள்ளவும் இடமளிக்கிருேம். ஆகவே, குறைந்த