பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடைப் பந்தாட்டம் 95

நல்ல பழக்கமும், தெளிவும் இதில் ஏற்பட்ட பிறகுதான் பந்தை வேகமாகத் தட்டிக்கொண்டு ஒட வரும் பின்னர் விரைவாகத் தட்டிக் கொண்டு ஒடும் பழக்கம் வந்த பிறகு எதிரிகள் தடுக்க வந்தால், அவர்களை ஏமாற்ற வளைந்து வளைந்து ஒடவும், பந்துடன் சுற்றி சுற்றி வரவும் திறமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்குப் பயிற்சியும், பழக்கமும்தான் உதவுமேயன்றி, புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் வராது.

இப்படித் தட்டிக் கொண்டு ஒடும் பொழுது. நாம் எந்தப் பக்கமாக ஒடப் போகின்றாேம் என்று எதிரிகள் உணர முடியாதவாறு, இடத்தைப் பார்த்துக் கொள்வதும், சாடையாக ஆட்களைப் பார்த்துக் கொண்டு அதற்கேற்ற வாறு வளைந்து ஒடுவதும் பலநாள் ஆட்டப் பயிற்சிக்குப் பிறகே வரக்கூடிய கலையாகும். நம் உடலுக்கு அருகிலேயே வைத்துப் பந்தைத் தட்டாமல், நமக்கு செளகரியமான ாரத்தில் பந்தை இருத்தி தட்டுவது,எளிதாகவும் வசதியாக வும் இருக்கும். இந்த ஆட்டத்தில் இது முக்கிய திறனுகும்.

55Gusso Grg. (Shooting)

எல்லாத் திறன் நுணுக்கங்களும் இந்த ஆட்டத்தில் இன்றியமையாதனவாக இருந்த போதிலும், இறுதியில் ஆட்டத்திற்காக வெற்றி எண்களைப் பெறும் வாய்ப்பைத் தருவது பந்தைக் குறியோடு வளையத்திற்குள் எறிவதாகும். குழுவினருடன் இணங்கி, ஒத்துழைத்துக் கூட்டுறவாக ஆடுகின்ற மற்றத் திறன்களே விட (Skills), குறியோடு எறியும் திறனைத் தனியாகவே இருந்து பழகிக் கொள்ளல் Tofoil (Practice).

எல்லோரும் பந்தை உருட்டலாம், எறியலாம்,

^

இடலாம். ஆல்ை பந்தை வளையத்திற்குள் எறிவதற்கு ஒரு தனித் திறமை வேண்டும். அழகாக ஒடினுல் மட்டும்