பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 விளையாட்டுக்களின் விதிகள் >

பந்து சென்று வளையத்தில் விழுந்து வெற்றி பெற்றால், வெற்றி எண் கணக்கில் சேரும். அந்த நிலையில், நடுவரின் விசில் ஒலியானது ஆட்டத்தைப் பாதிக்காமல் இருந்தால் சரிதான்.

விசில் கேட்கும் பொழுது அந்த ஆட்டக்காரர் பந்தை எறிந்து கொண்டிருக்க வேண்டும் அல்லது எறிவதற்கான ஆயத்தம் செய்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் நடுவரின் விசில் முயற்சியில் வளையத்தினுள் பந்து விழுந்து வெற்றி எண் பெற்றாலும், அது கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. 8. நீக்கப்படும் ஆட்டக்காரர்கள்

கடுமையான தவறுகளை அல்லது பண்பற்ற செய்கைகளை மேற்கொள்ளும் ஒரு ஆட்டக்காரர், மீண்டும் ஆட்டத்தில் பங்கு பெறும் வாய்ப்பின்றி நீக்கப்படுவார். விதியை மீறி, ஏதாவது படுமோசமான பெருந்தன்மையற்ற செயல்களைச் செய்கின்ற ஒரு ஆட்டக்காரரை, நடுவர்கள் ஆட்டத்திலிருந்தே நீக்கிவிடவேண்டும்.

தனியார் தவறோ அல்லது தனிநிலைத் தவறோ செய்து5-முறை தவறுக்குள்ளான ஒரு ஆட்டக்காரர், தன்னியக்கமாகவோ (Automatically) ஆட்டத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும். அல்லது வெளியேற்றப்படுவார்.

9. ஆட்ட அதிகாரிகளின் கடமைகள்

ஆட்ட அதிகாரிகள் ஆட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் கொடுப்பதற்கேற்ற வகையில் கீழ்க்காணும் உதவி சாதனங்களை உள்ளுர் குழு (Home Club) வைத்திருந்து, போட்டிக்கு முன் அதிகாரியிடம் வழங்க வேண்டும்.

(அ) ஆட்ட மணிப்பொறி: ஓய்வு நேரத்தைக் கண்காணிக்க ஒரு மணிப்பொறி வைத்திருக்க வேண்டும். ஆட்டத்தின் முழு நேரத்தைக் கண்காணிக்க ஒன்று. ஓய்வு நேரத்தைக் கணக்கிட ஒன்று. இவ்விரண்டும் குறிப்பாளரும் நேரக்காப்பாளரும் பார்க்கும்படியான (மேசைமேல்) இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

(ஆ) 28 விநாடி விதியைப் பின்பற்றி ஆட்டத்தைக் கட்டுப் படுத்தும் பொருட்டு ஆட்டக்காரர்களுக்கும், பார்வையாளருக்கும் தெரியும்படி, தகுந்த அடையாளம் இருப்பதோடு, அது 28 விநாடி விதியை செயல்படுத்துவோரால் சரியாக செயல்படுத்தப்பட வேண்டும்.

(இ) அகில உலகக் கூடைப்பந்தாட்டக் கழகத்தினரால் ஒப்புதல் பெற்ற ஆட்டக் குறிப்பேட்டில், விதிகளில் கூறியபடி ஆட்டத்தில் நடப்பதைக் குறிப்பாளர் குறிக்க வேண்டும்.