பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஆடுகளத்தின் அமைப்பும்,

- பகுதிகளும் 1. அமைப்பு - -

ஆடுகளத்தின் அமைப்பு நீண்ட சதுரவடிவமானது. அதன் நீளம் 120 மீட்டருக்கு மேற்படாமலும், 90 மீட்டருக்குக் குறையாமலும், அகலம் 90 மீட்டருக்கு மேற்படாமலும், 45 மீட்டருக்குக் குறையாமலும் (அகில உலகப் போட்டிகளில் பயன்படுத்துகின்ற ஆடுகளத்தின் அளவு நீளம் 110 மீட்டருக்கு மிகாமலும், 100 மீட்டருக்குக் குறையாமலும், அகலம் 75 மீட்டருக்கு மிகாமலும், 64 மீட்டருக்குக் குறையாமலும்) இருக்க வேண்டும். அகில உலப் போட்டிகளுக்கான ஆடுகளத்தின் அமைப்பு:

அதிக அளவு 110 மீட்டர் x 75 மீட்டர். குறைந்த அளவு 100 மீட்டர் x 64 மீட்டர்.

அகலப் பகுதியை விட நீளப் பகுதியின் அளவு எப்போதும் குறையவே கூடாது. பொதுவாக நன்றாக அமையக்கூடிய ஒரு ஆடுகளம் அந்தந்த இடத்தின் பரப்பளவைப் பொறுத்தே, ஆடுகளம் சிறப்பாக அமையும். . . . .

ஆடுகளத்தின் பகுதிகளைக் காட்டுகின்ற கோடுகள், பகுதி களைத் தெளிவாகக் காட்டுவனவாக, திருத்தமான முறையில் 5

அங்குலத்திற்கு மேற்படாத அகலம் உள்ளவாறு குறிக்கப்பட - -

வேண்டும். கோடுகளுக்குப் பதிலாகVவடிவமுள்ள பள்ளம் தோண்டி அடையாளம் செய்யவே கூடாது. o -

இலக்குக் கம்பங்கள், குறுக்குக் கம்பம் அவைகளின் கனத்திற் கேற்ப, (Dimension) கடைக்கோடுகளின் அகலம் குறிக்கப்பட வேண்டும். - - -

நீண்ட எல்லைக் கோடுகளைத் தொடுகோடுகள் அல்லது பக்கக் கோடுகள் என்றும், குறைந்த அளவுள்ள எல்லைக் கோடுகளைக் கடைக்கோடுகள் என்றும் கூறுவர். ஒவ்வொரு முனையிலும் (Corner) நிறுத்தப்பட்டிருக்கும் கொடியைத் தாங்கியுள்ள ஒவ்வொரு கம்பமும்,