பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 109

தான் விரும்புகிற எந்தப் பகுதியில் நின்றேனும் சர்வீஸ் போடலாம். (3 மீட்டர் முதல் 8 மீட்டர் வரை எல்லை அமையலாம் - Free Zone)

6. மாற்றாட்டக்காரர்களின் இருக்கை

விளையாட்டு வீரர்கள் அமரும் பகுதியானது (Team Bench) பின்னாட்டக்காரர்கள் ஆடும் பகுதியிலிருந்து இடதுபுறமோ அல்லது வலது புறமோ 3 மீட்டர் இடைவெளிவிட்டு இருக்கை அமைக்க வேண்டும்.

2. விளையாட்டுக்கு உதவுவன (EQUIPMENTS)

1. 6h16oo60 (Net)

நீளம் 9.50 மீட்டர், அகலம் 1 மீட்டர், இடைவெளி 10 செ.மீ. கொண்ட கட்டங்கள் உள்ளதாக வலை அமைய வேண்டும். வலையின் மேல்புறம் இரட்டை மடிப்புள்ள வெள்ளை நாடா7 செ.மீ. அகலத்திலும், கீழ் உள்ள வெள்ளை நாடா 5 செ.மீ. அகலத்திலும் வைத்துத் தைக்கப் பட்டிருக்க வேண்டும்.

வலையின் மையத்தில் வலையின் உயரம், ஆண்களுக்கு (2,43 மீ), பெண்களுக்கு (2.24 மீ) இருக்க வேண்டும். இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் 2 மீட்டர் இருக்க வேண்டும். வலையின் இரு முனைகளைக் கட்டுகின்ற உயரம், தரையிலிருந்து சமமாக இருக்க வேண்டும். அது சொல்லப்பட்ட உயரத்தைவிட, 2 செ.மீ.க்கு மேலே போகக் கூடாது.

2. பக்க வெள்ளை நாடா (Side Markers)

நடுக்கோடும் பக்கக் கோடும் சந்திக்கின்ற இடங்களுக்கு நேர் மேலாக வலையின் இருபுறமும் உள்ள வெள்ளை நாடாக்கள் 5 செ. மீட்டர் அகலமுள்ளதாகவும், 2 மீட்டர் நீளம் உள்ளதாகவும் இருக்க வேண்டும். Side Bands கட்டப்பட்டிருக்க வேண்டும். பக்க நாடாக்கள் வலையின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.

வலைகளில் கட்டியிருக்கும் வெள்ளை நாடாக்களுக்கு இணையாக, அவற்றிலிருந்து வெளிப்புறத்தில் சற்று தள்ளி வளைகின்ற தன்மையுள்ள வலைக் கம்புகள் (Antennae) பொருத்தப் பட்டிருக்க வேண்டும்.

வலைக் கம்பின் உயரம் 1.80 மீ., அகலம் 10 மி.மீ. அது கண்ணாடி நாரிழையில் ஆனதாக (Fibre Glass) அல்லது