பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 விளையாட்டுக்களின் விதிகள்

அதற்கிணையான பொருளால் ஆனதாக, நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையுடன் அமைந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு பக்க நாடாவிலிருந்தும் 20 செ.மீ. தூரத்தில் வலைக்கம்பானது வலையின் உயரத்திலிருந்து (31 அங்குலம்) 80 செ.மீ. உயரமுள்ளதாக அமைக்கப்படுதல் வேண்டும். இவ்வாறு பொருத்தப்பட்டிருக்கும் இரு வலைக் கம்புகளுக்கும் இடைப்பட்ட தூரம் 9 மீ. ஆகும். பக்க நாடாக்களும் இரு குச்சிகளும் வலையின் ஒரு பகுதியாகவே கருதப்படும். பந்து வெளியிலிருந்து உள்ளே வருகிற எல்லையையும் கட்டுப்படுத்துவதாக அமையும்.

3. &lbur156ir (Posts)

நடுக்கோட்டிற்கு நேராகப் பக்கக் கோட்டிலிருந்து 1 மீ. தூரத்திற்குத் தள்ளி கம்பங்கள் நடப்பட்டிருக்க வேண்டும். ஆட்டத்தை நடத்துகின்ற நடுவர்களுக்கும், துணை நடுவர்களுக்கும் அவைகள் எந்த விதத்திலும் இடையூறு செய்வதாக அமைந்திருக்கக்

கூடாது.

4. Lugl (Ball)

முடிந்தவரை மிருதுவான தோலினால் ஆக்கப்பட்டு, ரப்பர் அல்லது அதே போன்ற காற்றுப்பை உள்ளே இருக்குமாறு அமைக்கப்படும் பந்து, வட்ட வடிவமுள்ளதாக இருக்க வேண்டும். என்றும் நிலையாக இருக்கும் வண்ணத்தால் பந்து ஆக்கப்பட வேண்டும். உள்ளாடும் அரங்கில் பந்து வெளிறிய வண்ண (p67673m3 (Light Colour) @(B G616&TGld.

அகில உலக போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்தின் எடையும் சுற்றளவும் வருமாறு.

பந்தின் எடை 250 - 280 கிராம், பந்தின் சுற்றளவு 65 சென்டி மீட்டர் முதல் 67 சென்டி மீட்டர் இருக்க வேண்டும். பந்தின் காற்றழுத்தம் 0.300 - 0.325 அவுன்ஸ்.

மூன்று பந்துகள்: அகில உலகப் போட்டிகளின்போது ஒரே எடையும் சுற்றளவும் உள்ள 3 பந்துகளை வைத்துக் கொள்ளலாம். அதற்காக பந்தெடுத்துத் தரும் பையன்கள் 6 பேர்களை அமர்த்திக் கொள்ளலாம். ஆடுகளத்தின் நான்கு மூலைகளுக்கும் 4 பேர். ஒவ்வொரு நடுவரின் பின்னே ஒருவர் என 6 பேர்கள்.

5. 2-60L (Uniform)

கால்சட்டை கம்பளிச் சட்டை (ஜெர்சி) அல்லது பனியன்கள், இலேசாகவும், குதியற்றதாகவும் தோலால் அல்லது ரப்பரால்