பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 113

ஆட்டக்காரர்களையும் நடுவருக்கும் குறிப்பாளருக்கும் (Scorer) கூற வேண்டும்.

ஓய்வு நேரம் கேட்டு ஒரு ஆட்டக்காரரை மாற்றி அந்த ஓய்வு நேரம் முடிவடைந்து, ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அதே குழு, இன்னொரு ஓய்வு நேரம் கேட்டு வந்த புதிய மாற்றாட்டக்காரரை மாற்றிவிட முயலக் கூடாது. அந்த (வெற்றி எண்ணுக்குரிய) ஆட்டம் மறுபடியும் தொடங்கி முடிந்தால் அல்லது ஆட்டம் தானாக நின்றால்தான், அவர்கள் ஓய்வு நேரம் கேட்க முடியும்.

ஆட்டத் தொடக்கத்திலிருந்தே ஆடும் ஒரு ஆட்டக்காரர், மற்ற ஒரு மாற்றாட்டக்காரர் ஆடுவதற்கு வாய்ப்பளித்துவிட்டு வெளியே வந்து, பின் உள்ளே சென்று ஆட வேண்டுமானால், அவர் யாருக்கு இடம் கொடுத்து வெளியே சென்றாரோ, அவருக்குரிய இடத்தில்தான் இடம்பெற முடியும். அவர் ஒரே ஒரு முறைதான் வெளியே சென்று உள்ளே வரலாம்.

ஒரு மாற்றாட்டக்காரர் ஆடுகளத்தில் இறங்கி ஆடி, பின்னர் வெளியே வந்துவிட்டால், மீண்டும் உள்ளே சென்று ஆட முடியாது. ஆனால் எதிர்பாராத நிகழ்ச்சிகளாலோ அல்லது ஆட்டக்காரர் காயமுற்றாலோ பொதுவாக மாற்றாட்டக்காரர்களைப் போடுகின்ற வாய்ப்புக்கள் எல்லாம் முடிந்திருந்தாலோ, காயம்பட்ட அல்லது அபாயமடைந்த ஒரு ஆட்டக்காரருக்குப்பதிலாக இவர் இறங்கி, அவர் ஆடிய இடத்தில் ஆடலாம்.

ஒருவர் ஒரு ஆட்டக்காரரை வெளியேற்றிவிட்டதால், பொதுவாகச் செய்யக்கூடிய மாறுதல்களைச் செய்த பிறகும், ஆடுவோர் எண்ணிக்கையில் அந்தக் குழு குறைவாக இருக்குமானால், ஒரு குழு, அந்தக் குறிப்பிட்ட ஆட்டத்தில் (Set) தோற்றதாகக் கொள்ளப்படும். (Incomplete) ஆனால் அக்குழு பெற்ற வெற்றி எண்கள் அப்படியே இருக்கும்.

4. ஆட்டத் தொடக்கமும் அடித்தெறிதலும் 1. ஆட்டத் தொடக்கம்

போட்டியை (Match) நடத்துகிற சங்கத்தைப் பொறுத்தோ அல்லது அது இல்லாத பொழுது ஆடுகின்ற இரு குழுவினரின் இசைவைப் பொறுத்தோ ஒரு போட்டி ஆட்டத்தில் 2 முறை

ஆட்டங்களில் (Set) வெற்றி பெற வேண்டும். அகில உலகப் போட்டிகளில் ஒரு குழு வெற்றிபெற, 3 முறை வெல்ல வேண்டும்.