பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 விளையாட்டுக்களின் விதிகள் *ES

(ஈ) ஆட்டக்காரர்களை மாற்றும் நிகழ்ச்சியில் மாற்றம் நிகழ்ந்தவுடனேயே மீண்டும் ஆட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. அந்த இடை நேரத்தில் பயிற்சியாளர் அவரது ஆட்டக்காரர்களுக்கு ஆட்டம் பற்றிய குறிப்புக்களைத் தரலாம்.(Coach).

(உ) ஊறு ஏதேனும் நிகழ்ந்தால் (Injury) 3 நிமிட நேரம் இடை

வேளை உண்டு. ஆனால் அது ஓய்வு நேரமாக கருதப்படமாட்டாது. காயமுற்ற ஆட்டக்காரர் மாற்றப்படாத வரை, அந்த 3 நிமிட நேரமும் பயன்படும். இவ்வாறு நேர்கின்ற எதிர்பாராத நிகழ்ச்சியைக் கண்ட உடனேயே நடுவர் ஆட்டத்தை நிறுத்திவிடுவார். அதன் பிறகு ஆடிக்கொண்டு இருந்த வெற்றி எண்ணிலிருந்து ஆட்டம் மறுபடியும் தொடங்கும்.

(ஒவ்வொரு முறை ஆட்டத்திற்குப் பிறகும் 3 நிமிட நேரம் இடைவேளை உண்டு. 4-வது 5-வது முறை ஆட்டத்தின் இடையில் 5 நிமிடம் இடைவேளை நேரமாகக் கொள்ளப்படும். ஆட்டக் குறிப்பேட்டில் இரு குழுக்களைப் பதிவு செய்து கொள்ளும் ஆடுகளப் பக்கங்களை மாற்றிக் கொள்வதும் இந்த நேரத்திற் குள்ளேயே இருக்க வேண்டும்.

3. ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டால்

அகில உலகப் போட்டியில் (இயற்கைக் கொடுமை அல்லது

உதவி சாதனம் போன்ற) ஏதேனும் தடைஏற்பட்டு ஆட்டம் இடையில் நின்று 4 மணி நேரத்திற்குள்ளாக ஆட்டம் நடைபெறாது போனால்

(அ) அதே ஆடுகளத்தில் ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்து நடத்துகிறபோது தடையுற்ற அதே முறை ஆட்டத்திலிருந்தபடி வைத்துக் கொண்டு மேலே தொடர்ந்து ஆட வேண்டும். அதே ஆட்டக்காரர்கள் அதே நின்றாடும் இடங்கள் அதே வெற்றி எண்களுடன் ஆட்டத்தை நடத்த வேண்டும். நடந்து முடிந்த முறை ஆட்டங்களையும் அப்படியே கணக்கில் கொள்ள வேண்டும்.

(ஆ) வேறு ஆடுகளத்திலோ அல்லது விளையாட்டரங்கிலோ அந்த முடிவுறாத ஆட்டத்தை நடத்தினால் தடையுற்ற அந்த முறை ஆட்டம் மட்டும் நீக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு முன்னே விளையாடியிருந்த முறை ஆட்டங்கள் எல்லாம் அப்படியே குறிப்பேட்டில் இருக்க ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.

பலமுறை இடைஞ்சல்கள் ஏற்பட்டு, அதனால் 4 மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்படுகிற பொழுது குறிப்பிடப்படுகின்ற

வேறு ஒரு இடத்திலே போட்டி நடைபெற்றால் அந்த முழு ஆட்டமும் மீண்டும் முழுதுமாக ஆடப்பெற வேண்டும்.