பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| விளையாட்டுக்களின் விதிகள் =

மழுங்கிய முகாா ம ள்ளதாகவும், 5 அடிக்குக் குறைவில்லாததாகவும்

இருக்க வேண்டும்.

நடுக்கோட்டிற்கு நேரேஊன்றியுள்ள கம்பம், பக்கக் கோட்டின் மேலே இல்லாமல் 1 கெச தூரத்திற்கு அப்பால் ஊன்றி வைக்கப்பட்டிருக்க வேண்டும். பாதி வழிக்கோடு (Half-Way line) அல்லது நடுக்கோடு ஒன்று ஆடுகளத்தை இரண்டாகப் பிரிக்கப் பயன்படுகின்றது. 9.15 மீட்டர் ஆரமாக உடைய ஒரு வட்டம் ஆடுகளத்தின் மையத்தில் திருத்தமான முறையில் வரைந்து குறிக்கப்பட்டிருக்க வேண்டும். - 2. குறியீடுகளின் பயன்கள் (Markings)

(அ) பக்கக் கோடுகள் (Touch Lines): தொடு கோடுகள் அல்லது பக்கக் கோடுகளில் ஏதாவது ஒன்றில், பந்து முழுவதும் கடந்து வெளியே சென்றால், கடைசியாகப் பந்தை விளையாடிய ஆட்டக்காரரின் எதிர்க்குழுவில் உள்ள ஒருவர், பந்தை உள்ளெறிய (Throw-in) ei, Ltd @STLISud. - - - -

(ஆ) கடைக்கோடுகள் (Goal-Lines) இலக்குக் கம்பங்களுக்கு இடையே குறுக்கு குச்சிக்குக் கீழே செல்லாமல், தரையோடோ அல்லது மேலெழுந்த நிலையிலோ (in the air) கடைக்கோட்டைத் தாண்டி பந்து முழுதும் கடந்து சென்று விட்டால், கீழ்க்கண்ட இரண்டு முறைகளில் ஆட்டம் தொடங்கும். -

1.e5usog (Goal-kick) goebe possi (Attacking Side) பந்தைக் கடைசியாகத் தொட்டு விளையாடியிருந்தால், தடுக்கும் குழுவினருக்கு (Defending side) குறியுதை வாய்ப்புக் கிடைக்க, மீண்டும் ஆட்டம் தொடங்கும். - -

2 முனையுதை (Corner-kick) தடுக்கும் குழுவினர் பந்தைக் கடைசியாகத் தொட்டு விளையாடிஇருந்தால் தாக்கும் குழுவினருக்கு முனையுதை உதைக்கும் வாய்ப்புக் கிடைக்க, மீண்டும் ஆட்டம் துவங்கும். - -

இரு இலக்குக் கம்பங்களுக்கு இடையில், குறுக்குக் கம்பத்திற்குக் கீழே, கடைக்கோட்டைத் தாண்டிப் பந்து கடந்து சென்றால், அடித்தக் குழுவுக்கு, வெற்றி எண் (Goal) கிடைக்கும்.

(இ) நடுக்கோடு அல்லது பாதி வழிக்கோடு (Halfway line):

இக்கோடு ஆடுகளத்தை இரு சரிபாதியாகப் பிரிக்கின்றது. இதனால் ஏற்படும் பயன்கள்: - -- -