பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 விளையாட்டுக்களின் விதிகள்

மேற்கூறியவற்றைத் தவறு (Fault) என்று கூறிவிட்டு அடித்தெறியும் வாய்ப்பை அடுத்த குழுவினருக்கு நடுவர் கொடுப்பார், அடித்தெறிபவர் தவறிழைத்தால் அடித்தெறியும் வாய்ப்பு அடுத்தக் குழுவினருக்குப் போய்ச் சேரும்.

(அ) ஒவ்வொரு புதிய முறை ஆட்டத்திலும் முன்பு நடந்த ஆட்டத்தில் முதலில் அடித்தெறியும் வாய்ப்பை பெற்ற குழுவுக்கு எதிர்க்குழுவினர், (இப்பொழுது) முதலில் அடித்தெறியும் வாய்ப்பைப் பெறுவார். ஆனால் முடிவு காணும் முறை கடைசி ஆட்டத்தில் சுண்டி விடப்படும் நாணயத்தின் மூலம் அடித்தெறியும் வாய்ப்பு நிச்சயிக்கப்படும். யாராவது ஒரு ஆட்டக்காரர் ஆட்டத்தை நடத்த விடாமல் காலதாமதம் செய்கிறார் என்று நடுவர் கருதினால், அதற்குரிய தண்டனையை அவர் தரவேண்டும்.

(ஆ) திரையிடுதல் (Screen) தன் குழுவினர் ஒருவர் பந்தை அடித்தெறியும்போது எல்லோரும் ஒன்றாக கூடிக் குதித்துக் கொண்டு கைகளை அசைப்பதோ அல்லது இருவர் மூவராக சேர்ந்து கொண்டு அடித்தெறிவதை மறைப்பதோ கூடாது. அது தவறாகும் (Foul).

(இ) அடித்தெறியும் குழு தவறிழைத்தால் அடித்தெறியும் வாய்ப்பு மாற்றப்படும். இடம் மாற்றுதல் (Side-out) என அறிவித்த வுடன் அடித்தெறிவது அடுத்தக் குழுவிலிருந்து செய்யப்படும்.

(ஈ) சுற்றுமுறை (Rotation Order) பந்தை அடித்தெறியும் வாய்ப்பைப் பெறும் குழுவினர், கடிகாரம் சுற்றுகிற முறையைப்போல (Clock Wise) filp(5th 9(5%) 3605 (One Position) p_LGot Lombs)& கொள்ள வேண்டும். - -

முன்னைய முறை ஆடடத்தின் தொடக்கத்தில் உள்ளது போன்ற

நிலையை மாற்றி, வேறு இடத்தில் நிற்குமாறுள்ள நிலையை வைத்துக் கொள்ள விரும்பினால், அந்த முறை ஆட்டம்

தொடங்குவதற்கு முன்பே, குறிப்பாளருக்கு அதை அறிவித்துவிட வேண்டும்.

5. பந்தாடும் முறை 1. ஆடும் நேரத்தில்

(அ) உடம்பின் எந்தப் பாகத்தினாலாவது பந்தை விளையாடலாம்.