பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 121

(ஊ) தடுப்பதில் பங்குபெறும் எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு அவர்களில் ஒருவராவது பந்தைத் தொட்டிருந்தால்தான், அது சரியான தடுப்பு (Legal Block) என்று கூறப்படும். ஒன்றோ அல்லது இரண்டு ஆட்டக்காரர்கள் தடுப்பதில் பங்கு பெறும் பொழுது, குறைந்தது ஒரு மீட்டர் தூரத்திற்கப்பால் நின்று கொண்டிருக்கும் ஒரு ஆட்டக்காரர் அவர்கள் தொட்டாடிய பந்தை இரண்டாவது முறையாக எடுத்து மறுபக்கத்திற்கு அனுப்ப உரிமையுண்டு.

பின் வரிசையில் உள்ள ஒரு ஆட்டக்காரர் வலைக்கருகில் வந்து தடுப்பதில் பங்கு பெறுவது தவறாகும் (Fault).

(எ) தடு ப்பதில் ஈடுபட்டிருக்கும் பொழுது, பந்தைத் தொடாமல் வலைக்கு மறுபுறம் கைகள் சென்றாலும், பந்தைத் தாக்கி அடித்த பின் (After Spike) அந்த வேகத்தினால் வலைக்கு மறுபுறம் கைகள் சென்றாலும் அது தவறாகாது. 3. கோடுகளின் பயன்கள்

(அ) நடுக்கோடு (Centre Line) நடுக்கோட்டை மிதிப்பது தவறல்ல. ஆனால் நடுக்கோட்டை மிதித்து மறுபகுதியைத் தொடும் பொழுதுதான் தவறு எனக் கூறப்படும். வலைக்குக் கீழ்ப்பக்க நடுக்கோட்டைத் தாண்டி உடல் மறுபக்கம் கடந்து சென்றாலும், எதிராளியின் பக்கத்தரையைத் தொடாமல், எதிராளியைத் தொடாமல் இருந்தால் அது தவறல்ல.

உடலின் எந்தப் பாகமாவது எதிராளியின் பக்கத்தைத் தொட்டாலும், வலைக்குக் கீழாக உடலின் எந்தப் பாகத்தையாவது நின்று கொண்டே மறு பகுதிக்குச் செல்லுமாறு அசைத்து எதிராளியின் கவனத்தை ஈர்க்க முயன்றாலும் அதனால் எதிராளியைச் செயலாற்ற முடியாமல் தடுத்தாலும் தவறாகும். நடுவரின் விசிலுக்குப் பிறகு எதிராளியின் பக்கத்திற்குச் செல்வது தவறல்ல.

(ஆ) தாக்கும் கோடு (Attack Line) தாக்கும் கோட்டுக்குப் பின்னால் உள்ள பின்வரிசை ஆட்டக்காரர்கள் தடுப்பதில் பங்கு பெறக் கூடாது. அவர்களில் ஒருவர் ஆடுகளத்திற்கு வெளியிலே தாக்கும் எல்லையின் விரிவென்று கருதப்படுகிற இடத்தில் நின்று கொண்டிருந்தாலும், அவர் தாக்கும் எல்லைக்குள் (Attack Area) இருக்கிறார் என்றே கருதப்படுகிறார். அவர் வலைக்கு மேலே பந்தை இருத்தி அடிப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார். -

அவர்கள் தாக்கும் எல்லைக்குள் வந்து வலையின் மேல் உயரத்திற்குத் தாழ்வாக இருக்கும் பந்தை மட்டுமே ஆடி, மறு