பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 விளையாட்டுக்களின் விதிகள்

பக்கத்திற்கு அனுப்பலாம். ஆனால் அவர்கள் பகுதியிலே (பின்வரிசை) நின்றுகொண்டு எந்த முறையிலேனும் பந்தை அடித்து அனுப்பலாம். அவர்கள் தாக்கும் கோட்டை மிதித்தோ அல்லது குறுக்கிடவோ செய்யாது, தாக்கும் எல்லைக்கு வெளியிலேயோ உள்ளேயோ தாண்டிப் பந்தை அடித்துவிட்டு, பின் தாக்கும் எல்லைக்கு மேலேயோ அல்லது வெளியேயோ குதிக்கலாம்.

(இ) எல்லைக் கோடுகள் (Boundary Lines) வலையின் எல்லையைக் காட்டும் பக்க நாடாக்களுக்கு வெளியே பந்து சென்றால், அது தவறாகும். ஆடு களத்தில் எல்லைக்கு வெளியேயுள்ள தரையையோ அல்லது பொருளையோ அல்லது எந்தப் பகுதியையோ பந்து தொட்டாலும் வெளியே பந்து சென்றது என்றே (Out) பொருள்.

பக்கக் கோட்டைத் தொடுகின்ற பந்து சரியானதாகும். நடுவரின் விசிலுக்குப் பிறகு பந்து நிலைப்பந்தாக மாற ஆட்டம் நிறுத்தப் படுகிறது.

6. வெற்றி எண்ணும் பக்கம் மாற்றலும் (Points and Side Outs)

ஒருகுழுஅடித்தெறியும்வாய்ப்பை இழத்தல்(Sideou)அல்லது எதிர்க்குழு வெற்றி எண் (Point) பெறுதல் என்ற இரண்டில் ஒன்றைப் பெறுவதற்குரிய சூழ்நிலைகள் வருமாறு:

1. தரையைப் பந்து தொடுதல்.

2. தொடர்ந்தாற்போல் ஒரு குழு 3 முறைக்கு மேல் பந்தை விளையாடுதல்.

3. ஆட்டக்காரர் உடம்பின் மேல் பந்து பலமுறை விழுதல்.

4. பந்தைப் பிடித்தோ அல்லது சேர்த்துத் தள்ளியோ (Pushing) விளையாடுதல். --

5. தொடர்ந்தாற்போல் ஒரு ஆட்டக்காரர்.2முறை தானே பந்தை விளையாடுதல்.

6. அடித்தெறியும் நேரத்தில் ஒரு குழுவினர் தங்களுக்குரிய இடங்களிலிருந்து நிலைமாறி நிற்றல் (Fault of Position).

7. ஒரு ஆட்டக்காரர் ஆட்ட நேரத்தில் வலையைத் தொட்டு விடுதல்.

8. ஒரு ஆட்டக்காரர் நடுக்கோட்டைக் கடந்து எதிர்க்குழு

தரையைத் தொட்டுவிடுதல்.