பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 129

(எ) ஒவ்வொரு அடித்தெறியும் (Service) நிலைக்கு முன்னே பந்தைப் பெறுகின்ற குழுவின் ஆட்டக்காரர்களின் முதலிடத்தைக் கண்டு, அதன் வழி நடக்கும் இயல்பைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்.

(ஏ) பண்பற்ற செயல்கள் எல்லாவற்றையும் நடுவரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்.

(ஐ) நடுவரின் வேண்டுகோளின்படி இவர் எல்லாவிதங்களிலும் நடுவருக்குத் துணையாக இருந்து உதவிபுரிகிறார். 3. (5lLImsmir (Scorer)

நடுவருக்கு எதிராக உள்ள ஆடுகளப் பகுதிக்கு அப்பால், குறிப்பாளர் (Scorer) அமர்ந்திருப்பார்.

(அ) ஆட்டத் தொடக்கத்திற்கு முன்னால், ஆட்டக்காரர்கள், மாற்றாட்டக்காரர்கள் இவர்களின் பெயர்களை குறிப்பேட்டில் எழுதிக் கொள்வதுடன், குழுக்களில் மாற்றாட்டக்காரர்களைச் சேர்க்கும் உரிமையைப் பெற்றுள்ள குழுத் தலைவர்கள் அல்லது குழுப் பயிற்சியாளர்களின் கையொப்பங்களையும் பெற்றுக் கொள்கிறார்.

(ஆ) ஆட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு வருவதையும், இடையில் ஏற்படுகின்ற ஆட்டக்காரர்களின் மற்ற நடைமுறை களையும், ஆட்ட வேளையில் நிகழ்கின்ற குறுக்கீடுகள் பற்றியும் கூர்ந்து கவனித்துக் குறிப்பேட்டில் குறித்துக் கொள்கிறார்.

ஒவ்வொரு முறை புதிதாகக் கேட்கப்படும் ஓய்வு நேர சமயத்தில், அக்குழு எத்தனை முறை ஓய்வு நேரம் கேட்டுப் பெற்றிருக்கிறது என்பதையும் இவர் அறிவிக்க வேண்டும்.

(இ) நாணயத்தைச் சுண்டிவிட்ட பிறகும், ஒவ்வொரு முறை ஆட்டத்திற்கு முன்பு ஆட்டக்காரர்கள் நிற்கின்ற சுற்றுமுறை (Rotation Order) இடங்களை இவர் குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொள்வதுடன், முதல் முறையாக அடித்தெறியும் வாய்ப்பைப் பெற்றக் குழுவினரின் இடங்களை ஆட்டக் குறிப்பேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும். முதல் முறையான அடித்தெறியும் வாய்ப்பைப் பெற்ற குழுவினரின் இடங்களை ஆட்டக் குறிப்பேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும் என்பதுடன், நடுவர்கள் அவரிடம் வந்து கேட்டாலொழிய, மற்ற யாரிடமும் ஒரு குழு கொண்டுள்ள ஆட்ட சுற்றுமுறையைக்

காட்டக் கூடாது.

(ஈ) குறிப்பேட்டில் குறித்துள்ளபடி, ஆட்ட நேரத்தில் சுற்று

முறை ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதா என்பதையும்

அவர் கவனித்துக் கொள்ள வேண்டும்.