பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ro- டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 133

1. ஆடுகளத்தின் அமைப்பு

1. ஆடுகளம்

(அ) ஆடுகளம் (Ground) நீண்ட சதுரமாக இருக்க வேண்டும். அதனுடைய அளவு: நீளம் 100 கெசம் (91.40 மீ), அகலம் 60 கெசம் (55.00 மீ) இருக்க வேண்டும். அதன் எல்லைக்குள், படத்தில் காட்டி உள்ளபடி வெள்ளைக் கோடுகளால் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். நீண்ட அளவுள்ள எல்லைக் கோடுகளைப் பக்கக் கோடுகள் என்றும், குறைந்த அளவுள்ள கோடுகளைக் கடைக்கோடுகள் என்றும் கூறுவார்கள். ஆடுகளத்தைக் குறிக்கும் கோடுகள் முழுவதும் கடைசிவரை 3 அங்குலம் அகலம் கொண்டதாகவே குறிக்கப்பட வேண்டும்.

அகில உலகப் போட்டியில் நடக்கின்ற ஆடுகளத்தின் அளவு, 100 கெசம் 60 கெசம் என்பதே அனுசரிக்கப்படுகிறது.

(ஆ) ஆடுகளத்தை இரண்டாகப் பிரிக்கும் நடுக்கோடு அதன் முழுநீளத்திற்கு, ஒரே கோட்டினால் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆடுகளத்தின் கடைக்கோட்டிலிருந்து இருபுறமும் இருக்கும்.25 கெசக் கோடுகள் இரண்டும், ஒரே நேர்க்கோடுகளால் அதன் முழு நீளமும் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

(இ) உள்ளே தள்ளி விடல் (Push-in) செயலுக்காக நடுக்கோடு, 25 கெசக் கோடுகளில், பக்கக் கோடுகளில் இருந்து 5 கெசத் தூரத்திற்கு வெளியில் அதற்கு இணைக்கோடாக இருப்பது போல் (Parallel) 2. கெச நீளத்தில் கோடு ஒன்று குறிக்கப்பட வேண்டும். விளக்கத்திற்கு படத்தினைப் பார்க்கவும்.

(ஈ) ஒவ்வொரு பக்கக் கோட்டிலும், கடைக் கோட்டிற்கு இணையாக, 16 கெச தூரத்தில், பக்கக் கோட்டின் உட்புறத்தில் 12 அங்குலத்திற்கும் மிகாத குறி (Mark) ஒன்று குறிக்கப்படவேண்டும். (உ) ஒறுநிலை முனை அடி (Penalty Corner Hits) எடுப்பதற்காக கடைக்கோட்டில் அமைந்துள்ள இலக்கின் இருபுறமும், ஒவ்வொரு கம்பத்தில் இருந்தும் 5 கெசம், 10 கெசம் என்று கடைக் கோட்டில் ஆடுகளத்தின் வெளிப்புறமாக குறித்திருக்க வேண்டும்.

(ஊ) இலக்கின் நடுப்புள்ளியில் இருந்து ஆடுகளத்தின் உட்புறமாக, 7 கெச தூரத்தில், 6 அங்குல விட்டத்திற்கும் மிகாத புள்ளி ஒன்று குறிக்கப்படவேண்டும்.