பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 விளையாட்டுக்களின் விதிகள்

3. குழு அமைப்பும் ஆட்டக்காரர்களும் 1. குழு அமைப்பு (Team)

(1) ஒரு குழுவில் 11 ஆட்டக்காரர்களுக்கு மேல் ஆட்டத்தில் பங்கு பெறுவதற்காக இருக்கக் கூடாது. மொத்தம் 16 பேர். போட்டி ஆட்டம் இரு குழுக்களால் ஆடப்படும். 5 முன்னோட்டக்காரர்கள் (Forwards), 3 @6oL, smlumentissit (Half-backs), 2 ssol– காப்பாளர்கள் (Full Backs) 1 இலக்குக் காவலன், இவ்வாறு ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கும். 2. Lorsgl ei, Lsir firssir (Substitutes)

(ஆ) ஆட்ட நேரத்தில், 5 மாற்று ஆட்டக்காரர் இருக்கிறார்கள். 16 ஆட்டக்காரர்களில், ஆடுபவர்கள் தவிர, மீதமுள்ள ஆட்டக் காரர்களை, எத்தனை பேர்களை வேண்டுமானாலும், எத்தனை முறையேனும் மாற்றிக் கொண்டு ஆடலாம்.

ஒருவர் இடத்திற்கு மாறிப்போன ஒரு மாற்றாட்டக்காரர், வெளியே வந்த பிறகு, வேறு ஒருவர் இடத்திற்காக மீண்டும் மாற்றாளாய் ஆட உள்ளே செல்லலாம். (வெளியேற்றப்பட்ட ஆட்டக்காரர் ஒருவருக்காக ஒரு மாற்றாட்டக்காரரை மாற்றிக்கொள்ள அனுமதியில்லை. அவருடைய தண்டனை நேரம் முடிந்த பிறகு, அவரது இடத்தில் வேறு ஒருவரை மாற்றிக் கொள்ளலாம்.)

ஒறுநிலை முனை அடி அல்லது ஒறுநிலை அடி எடுக்கும் நேரம் தவிர மற்ற எந்த சமயத்திலும் மாற்றாட்டக்காரரை மாற்றிக் கொள்ளலாம்.

மேலே உள்ள 2 சூழ்நிலைகளும் அறிவித்த பிறகு, ஆட்டக்காரர் ஒருவருக்கு விளையாடஇயலாமற் போனால் மாற்றிக் கொண்டுவிட அனுமதி உண்டு.

இந்த நேரத்தில் இலக்குக் காவலனால் தடுத்தாடும் நிலையில் இயலாமற் போனால் உடனே வேறொரு இலக்குக் காவலனை மாற்றிக் கொள்ளலாம்.

ஏதோ ஒரு காரணத்தால், தடுத்தாட வேண்டிய இலக்குக் காவலன், தண்டனை பெற்று, வெளியேற்றப்படுகிறபோது, அந்தக் குழுவின் தலைவன் வேறொரு இலக்குக்காவலனை உடனே ஏற்பாடு செய்ய வேண்டும்.