பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 139

இலக்குக் காவலனை மாற்றுவதற்கு நேரத்தை வீணாக்கக் கூடாது. அதே சமயத்தில் இலக்குக் காவலனுக்குரிய தற்காப்புச் சாதனங்களையெல்லாம் அவர் அணிந்திருக்க வேண்டும்.

ஆடஇயலாதவருக்காக ஆள் மாற்றுகிறபோது, உடனே செய்ய வேண்டும். ஆட்டக் கடிகார நேரம் அதற்காக நிறுத்தப்பட மாட்டாது. குறிப்பு: 1. மாற்றப்படுகிற ஆட்டக்காரர் ஆடுகளத்திலிருந்து வெளியே வந்த பிறகுதான், மாற்றாட்டக்காரர் ஆடுகளத்திற்குள் நுழைய வேண்டும். அப்படி நுழைந்தால் அது தவறான நடத்தை என்று தவறுக்குள்ளாக்கப்படும்.

2. ஆட்டக்காரர் வெளியேறுவதும், மாற்றாட்டக்காரர் உள்ளே நுழைவதும், நடுக்கோட்டின் வழியாகத்தான் செய்ய வேண்டும்.

3. இலக்குக் காவலன் மாறுகிறபோது, அடிக்கும் வட்டத்தின் வழியாக வரலாம். அது நேரம் வீணாவதைத் தடுப்பதற்காகவே.

பெண்கள் ஆட்டத்தில் - ஆட்ட நேரத்தில் ஒரு பெண், தான் வெளியேற்றப்பட்டால் தனக்குப் பிறகு யாரென்று அவர் முன்கூட்டியே ஒருவரை அறிவிக்க வேண்டும். ஆட்டக்காரர் காயமுற்றதன் காரணமாக, ஆடி முடிக்க இயலாது போனால், அவரது குழுத் தலைவியின் வேண்டுகோளுக்கேற்ப, அவரது இடத்தில் வேறொரு ஆட்டக்காரரை ஆடச் செய்யலாம்.

3. குழுத் தலைவர்களின் கடமை

(அ) ஆடுகளத்தின் பக்கத்தைத் (Ends) தேர்ந்தெடுக்க, அல்லது முதலில் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க நாணயத்தைச் சுண்டி

எறிந்து குழுத் தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

(ஆ) தேவையானால், ஆட்டத் தொடக்கத்திற்கு முன் அவரவர்க்குரிய இலக்குக்காவலர்களை எதிர்க்குழுத்தலைவரிடத்தும் நடுவரிடத்தும் குறித்துக் காட்டவும், மற்றும் அதாவது, இலக்குக் காவலனை மாற்றும்பொழுது எடுத்துக் கூறவும் குழுத்தலைவர்கள் இருக்கின்றார்கள். * 4. ஆடும் நேரம் - 35 நி (10 நி) 35 நி

ஆட்டத் தொடக்கத்திற்கு முன்பே, இரு குழுத்தலைவர்களும், இணங்கி ஒத்துக் கொண்டாலொழிய ஆட்ட நேரம், ஒவ்வொரு பருவமும் 35 நிமிடங்களாக, இரு பருவங்கள் இருக்க வேண்டும்.

இடைவேளைக்குப் பிறகு, இரு குழுக்களும் ஆடுகளத்தின் பக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இடைவேளையின் நேரம்

10 நிமிடத்திற்குமேல்போகக்கூடாது. ஆட்டத்தொடக்கத்திற்கு முன்,