பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 141

7. பந்துக்கும் எதிராளிக்கும் இடையில் ஓடி, அந்த ஆட்டக் காரரின் வழியை அடைப்பதோ அல்லது உடலால் குறுக்கிடுவதோ அல்லது கோலால் தடை செய்வதோ கூடாது. அவர் பந்தைத் தொடுவதற்கு முன் தான் சென்று பந்தை எடுத்தாட முடிந்தாலன்றி, மற்றவர் எடுத்த பிறகு அவரின் இடப்புறம் சென்று கோலையோ

அல்லது ஆளையோ அடிக்கக் கூடாது. எதிராளியை எந்த

நிலையிலும் இடிப்பதோ, உதைப்பதோ, முன்னுக்குத் தள்ளுவதோ, இடறி விழச் செய்வதோ, அடிப்பதோ அல்லது பிடிப்பதோ கூடாது. 8. தன்னுடைய சொந்த அடிக்கும் வட்டத்தில் (Shooting circle) பந்து இருக்கும்பொழுது மட்டுமே, பந்தைக் காலால் உதைக்கவும், உடம்பின் எந்தப் பாகத்தினாலாவது பந்தைத் தடுக்கவும் இலக்குக் காவலன் அனுமதிக்கப்படுகிறான். இலக்கினுள் சரியாக அடிக்கப்படும் பந்து, இலக்குக் காவலனது உடலின் மேல் பட்டுத் திரும்பி வந்தாலும், அதற்காக, அவனைத் தண்டிக்க முடியாது.

ஒறுநிலை அடியில் (Penalty Stroke) இலக்குக் காவலன் பங்கு பெறும்பொழுது மட்டும், இந்த உரிமைகள் எல்லாம் கிடையாது.இந்த நேரத்தில் கையுறைகளைத் (Gloves) தவிர, மற்றக் காலுறைகளைக் (Pads) கழற்றவோ அல்லது பிற உதவி சாதனங்களை அகற்றிடவோ அனுமதிக்கப்படுவதில்லை.

9. இலக்குக் காவலனின் காலுறைகளில் அல்லது ஆட்டக்காரர், நடுவர் இவர்களது ஆடைகளில் பந்து விழுந்து தங்கி விட்டாலோ (Lodge), ஆட்டத்தை நடுவர் நிறுத்திவிட்டு எந்த இடத்தில் இந்த நிகழ்ச்சி நடந்ததோ, அதே இடத்தில் வைத்து புல்லி (Bully) மூலம் ஆட்டத்தைத் தொடங்கி வைப்பார்.

10. நடுவரின் மேல் பந்து பட்டாலும், மற்ற பொருள்களின் மீது பட்டாலும் அது ஆட்டத்தில் உள்ளதாகவே கருதப்படும். ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.

11. முரட்டுத்தனமான அல்லது அபாயகரமான ஆட்டம் என்றுமே அனுமதிக்கப்பட மாட்டாது. இவ்வாறு நடந்து கொள்வது, நடுவரின் கருத்துப்படி பண்பற்ற செயல் என்று கொள்ளப்படும்.

12. முரட்டுத்தனமான அல்லது ஆபத்தை விளைவிப்பது போல் ஆடுவது அல்லது நேரத்தை வீணாக்குவது, வேண்டுமென்றே வெளிப்படையாக விதிகளை மீறுவது, பண்பாடில்லாமல் நடந்து கொள்வது போன்றவை எல்லாம் தவறான நடத்தைகள் என்று குறிப்பிடப்பட்டு தண்டிக்கப்படும்.