பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|-|| விளையாட்டுக்களின் விதிகள் *Ec

ஆடுகளத்தின் உள்ளே குறிக்கப்பட்டிருக்கும் புள்ளியில் இருந்து எடுக்கப்படும். -

இந்த அடியை அடிப்பவர் பந்தைத் தள்ளலாம் (Push). அடிக்கலாம் அல்லது குடைந்தாடும் முறையால் தள்ளலாம் (Scoop). ஆனால் அவர் ஒரே ஒரு அடி (Stride) ஒரே முறைதான் தொடலாம் அல்லது அடிக்கலாம்.

தடுக்கும் குழு இலக்குக் காவலன் தான் இலக்குக் காவலனாக பணியாற்ற முடியாத பொழுது அல்லது ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்ட பொழுது, அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் அப்பணியைச் செய்யும் பொழுது, இலக்குக் காவலனுக்குரிய எல்லா உரிமைகளும் அளிக்கப்படும்.

ஒறுநிலை அடி எடுக்கப்படுகின்ற பொழுது பங்கு பெறுகின்ற இருவரைத் தவிர, மற்ற எல்லா ஆட்டக்காரர்களும் அருகில உள்ள 25 கெசக் கோட்டிற்கு அப்பால் நின்று கொண்டிருக்க வேண்டும்.

ஒறுநிலை அடியை அடித்தாட இருக்கின்ற ஆட்டக்காரர் எப்படி வேண்டுமானாலும் அடிக்கலாம். பந்து எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் செல்லலாம். அடிக்கின்ற விதிமுறைக்கு உட்பட்டே அடிக்க வேண்டும். அடி எடுக்கும் நேரத்தில், அந்தக் கடைக்கோட்டின் மேலேயே நிற்க வேண்டும். அடிப்பவர் அடிக்கத் தயாரானதும், இலக்குக் காவலன் எக்காரணத்தை முன்னிட்டும் அடி எடுக்கப்படும் வரை தனது கால்களை நகர்த்தவே கூடாது. அடித்த பந்தை இலக்குக் காவலன் தனது உடலாலோ அல்லது கையாலோ தடுத்தால் அது குற்றமல்ல. இலக்குக் காவலனுக்குரிய எல்லா உரிமைகளும் அவருக்கு அல்லது அந்த மாற்றாளுக்கு உண்டு. ஆனால், அவர் தன்னுடைய இலக்கினைக் காக்கும் பொழுது, தனது உடைகளை (உதவி சாதனங்களை) அகற்றாமல் இருக்க வேண்டும்.

இலக்குக் காவலன் கடைக்கோட்டை விட்டு நகரும் படியாக, அடிக்க இருப்பவர் பாவனை செய்தாலோ அல்லது பந்தை அடிக்க இருப்பவர் அடிப்பதற்கு முன் மயக்கம் அடைந்து விட்டாலோ, ஒறுநிலை அடி மீண்டும் எடுக்கப்படும்.

ஒறுநிலை அடியில் பந்து இலக்கினுள் நுழைந்தாலும், அல்லது

ஏதாவது ஒரு விதியை இலக்குக் காவலன் அல்லது அவரது மாற்றாள் மீறினாலும், அது வெற்றி எண்ணாகவே (Goal) மாறும்.

அடிக்கப்பட்ட பந்தைத் திறமையாக இலக்குக் காவலன் தடுத்துவிட்டால், வட்டத்திற்கு வெளியிலேயோ அல்லது