பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 149

உள்ளேயோ பந்து தங்கிவிட்டால், அந்த ஒறுநிலை அடி எடுத்தல் முடிவு பெற்றுவிடும். ஒறுநிலை அடிவெற்றி எண் பெறாமல் முடிவு பெறுமானால், தடுக்கும் குழுவினர் ஒருவரால், 16 கெச தூரத்தில் வைத்துத் தனி அடி அடிப்பதன் மூலம் ஆட்டம் தொடங்கப்படும்.

ஒறுநிலை அடியை அளித்து அதை நடத்துவதற்கும், அது முடிந்தவுடன் ஆட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கும், எடுத்துக் கொள்கிற நேரத்தை, முன்பே ஒத்துக் கொண்டிருக்கிற ஆட்ட நேரத்துடனேயே (Time of play) இணைத்துக் கொள்ள வேண்டும். (3-வது பகுதி, 4-வது பிரிவைக் காண்க). 9. வெற்றி எண் (Goal)

அடிக்கும் வட்டத்திற்குள் இருந்து, தாக்குவோரால் அடிக்கப் பட்ட அல்லது அவரது கோலில் பட்ட பந்தானது, இரண்டு இலக்குக் கம்பங்களிடையே குறுக்குக் கம்பத்திற்குக் கீழாகக் கடைக்கோட்டை கடந்து சென்றால், அதுவே வெற்றி எண்ணைத் (Goal) தருவதாகும். தடுக்கும் குழுவில் உள்ள ஒன்று அல்லது மேற்பட்ட ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து அந்தப் பந்தைத் தொட்டு அல்லது விளையாடினார்கள் என்று கூறுவது அர்த்தமற்றதாகும்.

ஆட்ட நேரத்தில், பந்து முழுவதும் கடைக்கோட்டைத் தாண்டிக் கடந்து செல்லும் பொழுது, இலக்குக் கம்பங்கள் அல்லது குறுக்குக் கம்பம் இடம்பெயர்ந்து போனால், அந்தக் கம்பங்கள் அங்கு இருந்திருந்தால், அதனுள் பந்து சென்றிருக்கக்கூடும் என்று நடுவர் கருதினால், அதை வெற்றி எண் என்றே நடுவர் கூறி விடுவார் (Goal is scored).

அதிகமான வெற்றி எண்களைப் பெறுகின்ற குழுவே ஆட்டத்தில் வெற்றி பெற்றதாகும்.

6. நடுவர்க்குரிய குறிப்புகள்

1. தனக்குரிய ஆடுகளப் பகுதியில் முடிவெடுக்கவும், ஆட்ட நேரம் முழுவதும், அங்கேயே நின்று ஆட்டத்தைக் கண்காணிக்கின்ற பொறுப்பும் உடையவராக இருக்கிறார்.

2. தனக்குரிய பகுதியில், முனை அடிகள், ஒறுநிலை முனை

அடிகள், ஒறுநிலை அடிகள், வெற்றி எண்கள் போன்ற முடிவினைத் தரும் பெரும் பொறுப்புகள் உடையவராக இருக்கிறார்.

3. ஆட்டநேரத்தைக் கண்காணிக்கவும், ஆட்டக்காரர்களை முழு நேரமும் ஆடவிடவும், வெற்றி எண்களின் மொத்த எண்ணிக்கையைக்