பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 விளையாட்டுக்களின் விதிகள் *Eo

வளையத்தை எறிந்த குழுவில் உள்ள இருவரில் யாராவது ஒருவர் அதைப்பிடித்து மறுபக்கம் எறிய, கீழே காணும் விதிகளில் ஏதாவது ஒன்றின்படி, வளையம் கீழே விழும்வரை ஆட்டம் தொடர்ச்சியாக நடைபெறும்.

வளையத்தை எறிகிற குழு, அவ்வெற்றி எண்ணுக்குரிய ஆட்டத்தை எடுத்தால், அக்குழு ஒரு வெற்றி எண் பெறும். அந்த வெற்றி எண் ஆட்டத்தை (Point) பிடிக்கும் குழு (Outside) எடுத்தால், அக்குழு வளையத்தை எறியும் வாய்ப்பைப் பெறுகிறது. இதனால் இருவருக்கும் வெற்றி எண் கிடைக்காது போவதுடன் வளையம் எறியும் வாய்ப்பும் மாறுகிறது. இவ்வாறு எறியும் குழுவாகவும் பிடிக்கும் குழுவாகவும் அடிக்கடி மாறும் நிலை இரு குழுக்களுக்கும் ஏற்படுகிறது.

எறியும் குழு, அந்த வெற்றி எண்ணுக்குரிய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ஒரு வெற்றி எண்ணை அக்குழு பெறும். அதை 1-0 என்பது மரபு. வளையத்தை எறிந்தவன் மீண்டும் எறிகிற வாய்ப்பைப் பெறுகிறான். ஆனால் இந்த முறை, அவனது பகுதியில் இடது கைப் பகுதியில் இருந்து வளையத்தை எறிய வேண்டும். அப்பொழுது அவனது பாங்கன் வலது கைப்புறப் பகுதிக்குள் நிற்க வேண்டும். வளையத்தை முன்போலவே, மூலைவிட்டப் பகுதியை நோக்கியே எறியவேண்டும். இப்பொழுது பிடிப்பவன், முன்னே வளையத்தைப் பிடித்தவனல்ல. இரண்டாவது எதிராளியாவான். பிடிக்கும் குழுவினர் இதுபோன்ற சமயத்தில் தங்களுடைய இடத்தை (Court) மாற்றிக் கொள்ளக் கூடாது. அவர்கள் எறிகிற குழுவாக இருந்தால்தான் பகுதியை (இடத்தை) மாற்றிக் கொள்ள வேண்டும்.

எறிகிற குழு வெற்றி எண்களைப் பெறுவது தொடர்ந்து நடைபெறும் வரை, வெற்றி எண் கூடிக்கொண்டே இருக்கும். அவர்கள் வெற்றி எண்ணைப் பெறாமல் எதிர்க்குழு செய்து விட்டால் ஒருவருக்கும் (எதிராளிக்கும்கூட) வெற்றி எண் கிடைக்காது. அவர்கள் வளையத்தை எறிந்து, அதில் வெற்றி பெற்றால்தான் வெற்றி எண் கிடைக்கும்.

உதாரணமாக, வளையத்தை எறிகிற குழுவுக்கு வெற்றி எண்கள் 4-0 (Four love) என்று இருக்கையில், அடுத்த வெற்றி எண்ணைப் பெறத் தவறும் பொழுது, பிடிக்கும் குழுவுக்கு எறிகிற வாய்ப்புக் கிடைக்கிறது. அப்பொழுது அந்தக் குழுவுக்கு வெற்றி எண்கள் 0-4 (Love-four) என்று இருக்கும். இப்படியே வெற்றி எண்கள் தொடர்ந்து போகும்.