பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 விளையாட்டுக்களின் விதிகள் *ES

உயர்த்தி (Over hand) வளையத்தை வழங்கும் எந்த முறையும் அனுமதிக்கப்பட மாட்டாது. அப்படிச் செய்வதால், வெற்றி எண் பெறுவதை இழக்க நேரிடும், எந்தச் சூழ்நிலைகளிலும், வலையைக் கடந்து கை செல்லக்கூடாது.

வளையத்தை எறிந்து வழங்குதலில், வேகமாக சுற்றி விடும் முறை (Wobling) அனுமதிக்கப்படுவது இல்லை.

4) ஒரு ஆட்டக்காரர் எந்த இடத்தில் இருந்து வளையத்தைப் பிடித்தாரோ, ஏறக்குறைய அதேஇடத்தில் இருந்துதான் வளையத்தை மறுபக்கத்திற்கு அனுப்பண்ேடும். -

ஆடுகளத்தின் நடுவில் இருந்து வளையத்தைப் பிடித்து வலை வரைக்கும் நடந்து சென்று, வலைக்கு மறுபுறம் வளையத்தைத் தூக்கிப் போடும் செய்முறை, அனுமதிக்கப்படாததோடு, வெற்றி எண்ணைப் பெறுகின்ற வாய்ப்பையும் இழக்கச்செய்கிறது.

5) எந்த வகையாயினும் சரி, ஏமாற்றுதல் அனுமதிக்கப்படுவது இல்லை. மீறிச் செய்தால், வெற்றி எண்களை இழக்க நேரிடும். வளையத்தை வழங்குதல் போன்று பாசாங்கு செய்பவை எல்லாம் பொதுவாக இந்த வகையைச் சார்ந்ததாகும்.

6) வளையத்தை உள்ளெறிந்து வழங்கும்பொழுது அவர் விரும்பினால் ஓடிவந்து எறியும் முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு ஓடிவந்து எறியும்பொழுது, கையை விட்டு வளையம் நீங்குகின்ற நேரத்தில் அவர் ஆடுகளத்தின் கடைக் கோட்டின் மேலாவது அல்லது அதன் பின்புறமாவது ஏதாவது ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்க வேண்டும்.

7) ஒரே ஒரு முறை எறிந்து வழங்க அனுமதி உண்டு. சில சமயங்களில் வலையில் பட்டு மறுபுறம் கடந்து சென்று, சரியாக விழ வேண்டிய பகுதியில் விழுந்திருந்தால் (Let) அதைச் சரியெனக் கருதாது, மீண்டும் ஒருமுறை எறிந்து வழங்க (Serve) அனுமதி கொடுக்கப்படும்.

வலையைத் தொட்டுக் கொண்டு செல்கிற வளையம் யாராலும் தொடப்படாமல் தவறான பகுதியிலோ அல்லது எல்லைகளுக்கு வெளியிலோவிழுந்தால், அது தவறானதாகும். எனவே, வளையத்தை எறிந்து வழங்கும் வாய்ப்பு வழக்கம் போலவே எதிர்க்குழுவினருக்குப் போய்ச் சேரும்.