பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 171

ஆடுகின்ற நேரத்தில் வலையைத் தொட்டு, மறுபக்கத்திற்குக் கடந்து செல்லும் வளையம், சரியான முறைப்படி செல்வதாகும்.

8) எந்த ஆட்டக்காரரும் பொதுவான பகுதியுள் அதாவது ஒவ்வொரு பக்கத்திலும் 3 அடி அகலம் உள்ளதான இடத்தில், நிற்கவும் கூடாது. அல்லது வளையத்தைப் போடவும் கூடாது. வலையைத் தாண்டி வளையம் பொதுப் பகுதியுள் விழுந்தாலும் தவறே. அப்படி விழுமாறு வளையத்தை வீசி எறிந்த குழு, அதற்குரிய வெற்றி எண் பெறுவதை இழக்கும்.

குறிப்பு: எந்தக் கோட்டின் மேலாவது ஒரு கால் இருந்தால், அது ஆடுகளத்தினுள் இருந்ததாகக் கருதப்படும். அதற்குத்

தண்டனை கிடையாது.

9) வலைக்கு மேலேயே வளையம் ஆடப்பட வேண்டும். கம்பத்தைச் சுற்றி வளையம் கடந்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

10) ஆடுகின்ற நேரத்தில், வளையத்தை எறிந்து வழங்கும் பொழுதும் அல்லது எல்லைக்குள்ளே வளையம் விழும்பொழுதும் சரியான பகுதியில் விழுகிற வளையத்தை ஆட இயலாது தவறவிடுகின்ற குழுவுக்கு எதிராக, வெற்றி எண் போய்ச் சேரும்.

வளையத்தை எறிந்து வழங்கலில், தவறான பகுதியில் விழுகின்ற அல்லது எல்லைக்கு வெளியே விழுகின்ற வளையத்தைத் தொடாமல் “பிடிக்கும் குழு"வினர் விட்டுவிட்டால், வளையம் எறிந்த குழுவினர் தமக்கு வெற்றி எண் பெற முடியாத வாய்ப்பை இழக்கின்றனர். (13-ஆவது விதியைக் காண்க).

11) முதன்முதலாகத் தரையில் வளையம் விழுந்த இடமே வளையம் தொட்ட இடமாகும். எந்த இடத்தில் வளையம் கிடக்கிறது என்பதைக் கருதவே கூடாது.

எல்லைக் கோட்டைத் தொட்டுவிட்ட வளையம் எங்கு சென்று கிடந்தாலும் கவலை இல்லை. அது ஆடுகளத்தினுள் விழுந்த தென்றே கருதப்படும்.

12) இரு எதிராளிகளும் ஆடுதற்குத் தயாராக இருக்கும்வரை,

எறிந்து வழங்கும் ஆட்டக்காரர் வளையத்தை எறியக்கூடாது.

13) பொது இடத்தைத் தவிர, ஒரு ஆட்டக்காரர் எங்கு நின்று கொண்டிருந்தாலும் கவலை இல்லை. 2-ஆவது விதியில் கூறியுள்ளபடி, அவர் வளையத்தைத் தொட்டாலும் அல்லது பிடித்தாலும் சரியானது என்றே கொள்ளப்படும். பொது இடத்தைத்