பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 விளையாட்டுக்களின் விதிகள் >

5. தீர்மானிக்கும் முறை ஆட்டத்தில் (Deciding Set) 11 வெற்றி எண்கள் ஒரு குழு பெறும் நிலையில் ஆடுகளப் பகுதியை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மாற்றாட்டக்காரர்கள்

1. ஒருமுறை ஆட்டத்தில் 5 மாற்றாட்டக்காரர்கள் அனுமதிக்கப் படுவர்.

2. ஒரே நேரத்தில் ஒருவரோ அல்லது ஒருவருக்கு மேற்பட்ட வரையோ மாற்றிக் கொள்ளலாம்.

3. ஒருமுறை ஆட்டத்தில் இரண்டு ஓய்வு நேரம் தரப்படும். 4.ஒவ்வொரு முறை ஆட்டத்திலும் 11வெற்றி எண்கள் எடுக்கும் நேரத்தில் அதிகாரப் பூர்வமான ஓய்வு நேரம் வழங்கப்படும்.

5. பந்தெறியும் முறை

1. தோள்பட்டை உயரத்திற்கு வருவது போல் பந்தை எறிந்து உள்ளங்கையின் துணையால் பந்தை எதிரணிக்கு அனுப்ப வேண்டும்.

2. ஒரே அடியில் பந்தெறி (Service) நடைபெற வேண்டும்.

3. பந்தெறி வலையில் பட்டால் எதிரணிக்கு சர்வீஸ் போடும் sumu'il &lso 3&lpg (Service change).

4. விசில் ஒலி கேட்ட 5 வினாடிகளுக்குள் பந்தெறிய வேண்டும்.

5. பொதுவிடக் கோட்டைத் தவிர மற்ற கோடுகளில் பந்தெறி (Service) விழுந்தால் அது சரியானதாகக் கருதப்படும்.

6.விசில் ஒலிக்குப்பிறகு பந்தை தரையில் தட்டுவதோ உயரப் போட்டுப் பிடித்தலோ கூடாது.

6. ஆட்டக்காரர்களின் கவனத்திற்கு 1. ஒரு தப்படிக்கு மேல் வைக்காமல் பிடித்த பந்தை எதிரணிக்கு எறிய வேண்டும்.

2. இரு கைகளால் பந்தைப் பிடித்து, ஒரு கையால் மட்டும்தான் எதிரணிக்கு பந்தை அனுப்ப வேண்டும். -

3. பந்தைப் பிடிக்கும் போதும், எறியும் போதும் காலுக்கும் தரைக்கும் தொடர்பு இருக்க வேண்டும்.