பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ro- டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 185

2. இலக்குக் கம்பங்கள்

ஒவ்வொரு இலக்குக் கோட்டின் மைய நிலையாக அமைந்திருக்கும் இடத்தில்தான் இலக்குக் கம்பம் நிறுத்தப் பட்டிருக்கிறது. அதாவது எறி வட்டம் போடுவதற்காகப் பயன்படும் மையப் புள்ளிதான், கம்பம் நிறுத்தவும் உதவுகின்ற இடமாகும்.

செங்குத்தாக நிறுத்தப்பட்டிருக்கும் இலக்குக் கம்பத்தின் உச்சியிலிருந்து, 6 அங்குல தூரம் ஆடுகளத்தின் உட்பக்கம் செல்வது போல, 15 அங்குல விட்டமுள்ள ஒரு இரும்பு வளையம் (Ring) பொருத்தப்பட்டிருக்கும். அந்த இரும்பு வளையத்தில், இருபுறமும் திறப்புள்ள நூலாலான வலை ஒன்று சுற்றிலும் பின்னப்பட்டிருக்கும்.

அந்த வலை சார்ந்த வளையத்தின் பகுதியே, பந்தை எறிந்தாடும் இலக்காக (Goal) அமைந்திருக்கிறது.

அந்தப் பந்தெறி இலக்கின் உயரமானது, தரையிலிருந்து சரியாக 10 அடி உயரம் இருப்பது போல் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு இலக்குக் கம்பத்தின் உயரமும், அதில் பொருத்தப் பட்டிருக்கும் இரும்புவளையத்தின்மேல் அளவுக்கு மேலே போகாமல் (level), இணையாக இருப்பது போல் அமைந்திருக்க வேண்டும்.

நிறுத்தப்பட்டிருக்கும் இலக்குக் கம்பமானது, எப்பொழுதும் செங்குத்தாக, நிமிர்ந்து நிற்பதற்காக, தரையில் புதைந்து தாங்குகின்ற சாதனங்களால் அல்லது உலோகத்தால் ஆன தளம் அமைப்பதன் மூலம் தாங்கிகள் செய்து வைக்கலாம். ஆனால் கம்பத்தைக் காக்க உதவும் அந்தத் தாங்கி சாதனமானது, எக்காரணத்தை முன்னிட்டும் இலக்குக் கோட்டைக் கடந்து, ஆடகளத்திற்குள் துருத்திக் கொண்டு வந்து விடுமாறு அமைந்துவிடக் கூடாது.

3. பந்து

வலைப் பந்தாட்டத்திற்குப் பயன்படுகின்ற பந்தானது, கழகக் &mo Lm Lljl (Association Foot Ball No.5) Lutu(Blisp 5-ஆம் எண் அளவுள்ள கால்பந்தாகவும் இருக்கலாம். அல்லது கூடைப்பந்தாகவும் இருக்கலாம்.

அல்லது 27 அங்குலத்திலிருந்து 28 அங்குலம் வரை சுற்றளவுள்ளதாகவும், 14 அவுன்சிலிருந்து 16 அவுன்சு வரை இடைப்பட்டஎடையுள்ளதாக முழு அளவு காற்றடைக்கப்பட்டதாகவும் பந்து இருக்க வேண்டும்.

ஆடப் பயன்படுகின்ற அந்தப் பந்தானது, தோல் துண்டுகளால் தைக்கப்பட்டிருக்கலாம்; அல்லது தோலால் அல்லது ரப்பரால்