பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c<SP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 187

வார்ப்படம் செய்தது போன்ற அமைப்பிலும் உருவாக்கப் பட்டிருக்கலாம். 4. ஆட்டக் காலணி

ஆடுவதற்காக, எந்தவிதமான தகுந்த காலணிகளையும் (Shoe) பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், கூர் ஆணிகள் பதிக்கப் பட்டிருக்கும் காலணிகளை அணிந்து கொண்டு விளையாடக்கூடாது. அது ஆட்ட விதிகளுக்குப்புறம்பானதாகும்.

2. விளையாடும் முறைகள் 1. குழுவின் அமைப்பு

7 ஆட்டக்காரர்கள் கொண்டது ஒரு குழுவாகும். அந்த 7 ஆட்டக்காரர்களும் எந்தெந்த முறையில் இருந்து ஆட வேண்டும் என்று பிரித்தும் வைத்திருக்கின்றார்கள், அவர்களின் ஆடும் இடங்கள் (Position) 1316issuolomgol.

1. 3605(561 stolusuit (Goal Shooter) 2. இலக்கினைத் தாக்குபவர் (GoalAttacker) 3. எல்லையில் தாக்குபவர் (WingAttack) 4. மைய ஆட்டக்காரர் (Centre) 5. எல்லைக் காப்பாளர் (Wing Defence) 6.360&lramjungmi (Goal Defence) 7.96,(5 3m6u6 (Goal Keeper)

2. மாற்றாட்டக்காரர்கள்

ஒரு ஆட்டக்காரர் காயமுற்றாலோ அல்லது ஆட இயலாத நிலையினை அடைந்துவிட்டாலோ, அந்த ஆட்டக்காரர் ஆட்டத்தில் பங்குபெற இயலுமா அல்லது இயலாதா என்பதை நிர்ணயித்து உறுதி செய்ய, 5 நிமிட நேரம் எடுத்துக் கொள்ள அனுமதியுண்டு.

காயமுற்றாலோ அல்லது சுகவீனம் அடைந்தாலோ, ஒரு ஆட்டக்காரருக்குப் பதிலாக மாற்றாள் ஆடுகளத்தினுள் சென்று ஆடலாம். ஆனால் அவருக்குப் பதிலாக புதிதாக வந்த மாற்றாள் ஆடும்பொழுது, சுகவீனமுற்ற அல்லது காயமுற்ற ஆட்டக்காரர் மீண்டும் உள்ளே வந்து ஆட அனுமதி இல்லை. திரும்பி வந்து அவர் ஆட முடியாது.

ஆட்டம் தொடங்கிய பிறகு, காலம் தாழ்த்தி வருகிற ஒரு ஆட்டக்காரர் வந்த உடனே ஆடுகளத்தினுள் இறங்கி ஆட முடியாது.