பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c >> டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 17

பட்டிருக்க வேண்டும். அதிலே அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகள் நன்றாக உள்ளே செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அடித் தட்டுகள் தட்டையாகவும் குறுகியதாகவும், அரை அங்குலம் அகலத்திற்குக் குறைவின்றியும் காலணியின் மொத்த அகலம் வரைக்கும் நீண்டு, முனைப்பாகத்தில் வட்டவடிவமான அமைப்புக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

குமிழ்கள் அரை அங்குலத்திற்குக் குறையாத விட்டம் கொண்டு, வட்ட வடிவம் உள்ளதாக இருக்க வேண்டும். அடித்தட்டுக்களையும குமிழ்களையும் இணைந்தாற் போலவே காலணியில் அமைத்துக் கொள்ள விரும்பினாலும், ஆட்டத்திற்குரிய விதிகளுக்கு உட் பட்டிருக்க வேண்டும்.

காலணியின் முன் பகுதியிலும் (பாதம்), பின்பகுதியிலும் (குதிகால் பாகம்) உள்ள குமிழ்கள் அல்லது அடித்தட்டுகள் எல்லாம் முக்கால் அங்குல உயரத்திற்கு மேல் போகக் கூடாது.

திருகும் முறையில் செய்யப்பட்டக் குமிழ்களைத் தவிர, உலோகத்தால் செய்யப்பட்ட குமிழ்கள் தோலால் அல்லது ரப்பரால் மூடப்பட்டிருந்தாலும் அவற்றை அணியக் கூடாது. ஆகவே, விதிகளுக்கு உட்பட்ட காலணிகளை அணிந்தே ஒருவர் ஆட வேண்டும். ஒரு ஆட்டக்காரருக்குரிய விளையாட்டுச் சாதனங்கள்

ஒரு கம்பளி சட்டை (Jersey) அல்லது அரைக் கை சட்டை, அரைக்கால் சட்டை, பின்னல் காலுறை (Stocking) காலணிகள் முதலியன. பிற ஆட்டக்காரர்கள் அணியும் வண்ண உடைகளில் இருந்து மாறுபட்ட வண்ணத்தாலான சட்டை ஒன்றை, இலக்குக் காவலன் அணிந்திருக்க வேண்டும்.

காலணிகளுக்குள்ளக் கட்டுப்பாட்டைப் போலவே இன்னும் ஒன்று. செயற்கையான கை, மோதிரங்கள், இடைவார் இவற்றுடன் யாரும் ஆடவே கூடாது.

தண்டனை இவ்விதியை மீறி களம் புகுந்து ஆட வந்த ஓர் ஆட்டக்காரர். தற்காலிகமாக ஆட்டத்தை விட்டு வெளியேற்றப் படுவார். அவருடைய ஆட உதவும் உதவி சாதனங்களைத் திருத்தி ஒழுங்குபடுத்திக் கொண்டு, நடுவரிடம் அவற்றைக் காட்டி அனுமதி பெற்ற பின்னரே ஆடுகளத்தினுள் நுழையவேண்டும். அதுவும் பந்து விளையாடப்படாத நேரம் பார்த்துத்தான் உள்ளே வரவேண்டும்.