பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 விளையாட்டுக்களின் விதிகள் >

1. இலக்குள் எறிபவர், இலக்குக் காவலர் இருவரும் அவரவருக்குரிய இலக்கு வட்டங்களுக்குள்ளே நிற்க வேண்டும்.

2. இலக்கினைத் தாக்குபவரும் இலக்கின் காப்பாளரும், வலது கைப்புறம் உள்ள இலக்குத் திடலுக்குள் (Goal Third) போய், மைய ஆட்டக்காரரைப் பார்த்திருப்பது போல் நிற்க வேண்டும்.

3. எல்லையில் தாக்குபவரும், எல்லைக் காப்பாளரும், இடது கைப்புறம் உள்ள இலக்குத் திடலுக்குள் போய், மைய ஆட்டக் காரரைப் பார்த்திருப்பது போல் நிற்க வேண்டும்.

4. இரண்டு குழுவின் மைய ஆட்டக்காரர்களும் நடுத் திடலுக்குள் (Centre Third) நின்று கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள முறைப்படி, ஆட்டக்காரர்கள் அவரவருக்குரிய இடங்களில் நிற்கின்றார்கள் என்று முழுதும் ஐயமுற அறிந்து கொண்டபின், யார் முதல் எறி எறிந்து வழங்க வேண்டுமோ, அந்த மைய ஆட்டக்காரரிடம் நடுவர் பந்தைக் கொடுத்து, விசில் ஒலி மூலம் சைகை கொடுக்க, ஆட்டம் தொடங்கும்.

அதற்குப் பிறகு, ஆட்டக்காரர்கள் சுயேச்சையாக, அவரவருக் குரிய முறையில் இயங்கி ஆடலாம்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்புதான், இதுபோன்று ஆட்டக்காரரின் ஆடும் இடங்களைக் கண்காணித்துத் தெளிவாகிக் கொள்ள வேண்டும்.

3. ஆட்டம் தொடங்கும் முறை

1. ஆட்டம் தொடங்குவதற்கு முன்

முதல் எறி எறியும் வாய்ப்பு பெற்ற மைய ஆட்டக்காரர், நடுத்திடலில் உள்ள மைய வட்டத்தில் நின்று கொண்டிருக்க வேண்டும். -

மைய வட்டத்தினுள் நிற்கும் மைய ஆட்டக்காரருக்கு எதிர்க் குழுவைச் சேர்ந்த மைய ஆட்டக்காரர், நடு திடலுக்குள்ளேதான் நின்று கொண்டிருக்க வேண்டும் என்றாலும், நடுவரின் விசில் ஒலிப்பதற்குள், மைய வட்டத்தின் கோட்டிலிருந்து, 3 அடிக்கு அப்பால்தான் நின்று கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் குறிப்பிட்ட ஆடும் எல்லை (Playing area) உண்டு. அவற்றுக்குள்ளேயிருந்துதான் ஆட வேண்டும்.

ஆட்டக்காரர் எழுவர் இருந்தாலும், ஆடுதற்கு அமைக்கப்பட்ட இடங்கள், எறிவட்டம் - இலக்குத்திடல் நடுத்திடல் -