பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G- - டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா தித் - 193 அயல்டம் என்ற தவறுக்குள்ளாவதற்கு, அவர் அயல் எல்லையான வேறு ஆடும் திடலுக்குள் (Third) சென்றுவிடுவது மட்டுமல்ல.தனது ஆடும் எல்லையைவிட்டு, அடுத்த எல்லையைக் குறிக்கும் கோட்டைத் தொட்டுவிட்டாலும் கூட, அவர் அயலிடம் என்ற தவறுக்குள்ளாகிவிடுகின்றார். . . . * ஒரு ஆட்டக்காரர்தான் விரும்பினால், அடுத்த எல்லைத்திடல் பகுதியிலிருந்து, பந்தைக் கைநீட்டிப் பிடிக்கல்ாம். தொட்டாடலாம். தடையில்லை. ஆனால், தன் எல்லையைத் தவிர அந்த அடுத்தத் திடலின் எல்லையைக் குறிக்கும் கோட்டைக்கூட மிதிக்கக் (Touch) கூடாது. : * *

இந்த விதியை மீறி அயலிடம் ஆனால், அதற்குரிய தண்டயைாவது:

இந்த விதியை மீறி நடந்தவரின் எதிர்க்குழுவினருக்குத் தனி எறி வழங்கும் (Free pass) வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அந்த ஆட்டக்காரர் எந்த இடத்தில் நுழைந்து அயலிடம் ஆனாரோ, அந்த இடத்திலிருந்தே தனி எறி வழங்கப்படும்.

தனி எறி வாய்ப்பைப் பெறும் எதிர்க்குழுவினைச் சார்ந்தவர், அந்தக் குறிப்பிட்டஎல்லைப்பரப்பிலிருந்து (PlayingArea) ஆடுகின்ற உரிம்ை பெற்ற ஆட்டக்காரராகவும் இருக்க வேண்டும். -

எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இரண்டு ஆட்டக்காரர்கள் ஒரே - &lduileo (Simultneously) 9lusSlLib ஆகிவிட்டால்: - எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இரண்டு ஆட்டக்காரர்கள் ஒரே சமயத்தில் அயலிடம் ஆகிவிட்டால், அந்த இருவரும் பந்தைத் தொடாமல் இருந்திருந்தால், அவர்கள் இருவரும் தண்டனை பெற மாட்டார்கள். --

அவர்களிருவரில் யாராவது ஒருவர் பந்தைத் தொட்டாடி

யிருந்தாலும் அல்லது பந்தைத் தன் வசம் வைத்திருந்தாலும், - -

வைத்திருந்தவர் அயலிடம் என்ற தவறு சுமத்தப்பட்டு, அதற்குத் தண்டன்ையாக, அவர்கள் ஆடும் எல்லைப்பரப்பிலிருந்து மேல் எறி. (Throw-up) எடுக்க ஆட்டம் தொடங்கும். -

இரண்டு பேருமே பந்தைத் தொட்டாடியிருந்தாலும் அல்லது பந்தைத் தம் வசம் சேர்ந்தாற்போல் வைத்திருந்தாலும், அவர்கள் இடத்திலிருந்து மேல் எறி எறிய ஆட்டம் மீண்டும் தொடங்கும்.

இரண்டு ஆட்டக்காரர்களுமே, தொடர்ந்தாற்போல் இரண்டு திடல் எல்லைக்குள்ளாக இருக்கும்படி நின்று கொண்டிருந்தால்,