பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 197

மேலே காணும் காரணங்களுக்காக, மேல் எறியும் வாய்ப்பை நடுவர் பெற்று, குறிப்பிட்ட இரண்டு ஆட்டக்காரர்களையும் அதில் ஈடுபடுத்தி, ஆட்டத்தைத் தொடங்கி வைப்பார். இனி, மேல் எறி நிகழ்த்தும் முறையைப் பற்றிக் காண்போம். -

எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இரண்டு ஆட்டக்காரர்களும், தங்கள் இலக்கினைப் பார்ப்பது போலவும், அதுபோலவே எதிரே நிற்பவரின் முகத்தைப் பார்ப்பது போலவும், (நேருக்கு நேர்) கைகள் பக்கவாட்டில் உயர்ந்திருக்க கால்கள் எந்த இடத்திலாவது, அவர்கள் விருப்பம்போல் இருப்பதுபோல, நிற்க வேண்டும்.

அவர்கள் கால் வைத்து நிற்கும் முறையானது, அருகருகே இருக்கும் அவர்களது நெருங்கியுள்ள இரு கால்களுக்கும் இடையே உள்ள தூரம் 3 அடி இருப்பது போலவே, எப்பொழுதும் நிற்க வேண்டும். -

இருவரின் இடைப்பட்ட நடுவிடத்திலிருந்து, 2 அடி உயரத்திற்கு மேற்படாதவாறு, பந்தைத் தூக்கிமேல் நோக்கி நடுவர் எறிய வேண்டும். அவ்வாறு அவர் பந்தைத் தூக்கி உயர்த்தும்போது, அந்த இரண்டு ஆட்டக்காரர்களில் யார் குள்ளமாக இருக்கின்றாரோ, அந்தக் குள்ளமானவரின் தோள்மட்ட அளவுக்குப் பந்து இருப்பது போல முதலில் பந்தைப் பிடித்து, அதன் பிறகே நடுவர் பந்தை மேல் நோக்கி எறிய வேண்டும்.

தன் கையை விட்டுப் பந்தை உயரே எறிந்தவுடன், நடுவர் விசில் ஒலி மூலம் சைகை கொடுத்துவிடவேண்டும். விசில் மூலம் சைகை கிடைக்கும்வரை இரண்டு ஆட்டக்காரர்களும், தங்கள் இடத்தை விட்டு அசையவே கூடாது.

அப்படி, யாராவது ஒருவர் நகர்ந்து அல்லது விரைவில் அசைந்து, பந்தை ஆட முற்பட்டுவிட்டால், அவர் தவறிழைத்தவ ராகின்றார். உடனே, எதிர்க்குழுவுக்குப் பந்தெறிந்து ஆட அனுமதி கிடைத்துவிடுகிறது. --

இவ்வாறு, மேல்நோக்கி எறியப்பட்ட பந்தை, ஒரு ஆட்டக்காரர் பிடிக்கலாம். அல்லது தான் விரும்பும் திசைப்பக்கம் தட்டிவிடலாம். ஆனால், எதிராட்டக்காரர் மேலே படும்படியாக, நேராகவோ தள்ளிவிடவோ, தட்டவோ கூடாது.

மற்ற ஆட்டக்காரர்கள் அனைவரும் அவரவர் இடங்களின் எல்லைக்குள்ளேயேதான் நிற்க வேண்டும். அல்லது இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.