பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cos’ டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 199

இனி, விளையாட்டின் முக்கிய விதிமுறைகளை தெரிந்து

கொள்வோம். -

5. விளையாட்டின் விதிமுறைகள் 1. ஆட்டக்காரர் பந்தைத் தொட்டாடும் முறைகள்

(1) ஒரு ஆட்டக்காரர் பந்தைத்தொட்டோ அல்லது பிடித்தோ

விளையாடுகின்ற நேரத்தில் கடைப்பிடிக்கும் சில விதிமுறைகள் (Method of play).

(அ) ஆட்டக்காரர் ஒருவர் ஒரு கையால் பந்தைப் பிடித்தாடலாம், அல்லது இரு கையாலும் பிடிக்கலாம்.

(ஆ) பந்தானது, இலக்குக் கம்பத்தின் மீது பட்டு மோதி, திரும்பும்போது (Rebounds) அந்தப் பந்தைப் பிடித்தாடலாம். அல்லது, தானே எறிந்த பந்து இலக்குக் கம்பத்தின் மீது மோதி எதிர்ப்பட்டுத் திரும்பி வரும்போது, மீண்டும் அதே பந்தைப் பிடித்தும் ஆடலாம்.

(இ) தன் கைக்கெட்டுகின்ற அளவுக்கு (Reach) எழும்பி வருகின்ற தானே பிடித்து முதலில் வைத்திருக்காமல், தன் குழு ஆட்டக்காரருக்குத் (பந்தை) தட்டியோ அல்லது தள்ளித் துள்ள விட்டோ வழங்கலாம்.

(FF) தன்னால் பிடித்தாடுவதற்கு இயலாத அளவுக்கு உயரமாகச் செல்கின்ற (air) பந்தைப் பிடித்தாட முயற்சிக்கும்போது, தன்னால் சமநிலையை இழந்தக் கட்டுப்பாடற்ற நிலையில், ஒருமுறைக்குப் பலமுறைத் தொட்டால்கூட, அதனை முடிந்தால், பிடித்துக் கொள்ளலாம். இல்லையேல், தன் குழு ஆட்டக்காரருக்குக் கிடைப்பது போல அனுப்பி வைக்கலாம். அல்லது ஒருமுறை பந்தைத் தட்டி அனுப்பலாம். அல்லது ஒருமுறை பந்தைத் துள்ளவிட்டு அனுப்பலாம். - - - -

2. ஒரு ஆட்டக்காரர் பந்தைப் பிடித்து விட்டிருக்கிற அல்லது தன்வசம் வைத்துக் கொண்டிருக்கிற பொழுது:

(அ) எந்த முறையிலாவது, எந்தத் திசையிலாவது, தன் விருப்பப்படி, (தன் குழு) மற்றொரு ஆட்டக்காரருக்கு எறிந்து அனுப்பலாம்.

(ஆ) ஒரு கையால் அல்லது இரு கைகளால் எந்தத் திசையிலாவது, பந்தைத் துள்ளவிட்டுத் தள்ளி (Bounce) மற்றொரு ஆட்டக்காரருக்கு அனுப்பலாம். -