பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 . விளையாட்டுக்களின் விதிகள்

கி - -

3. ஒரு ஆட்டக்காரர். தான் பந்தை பிடித்துக் கொண்டிருக்கிற அல்லது தன்வசம் பந்தை வைத்துக் கொண்டிருக்கிற பொழுது, செய்ய வேண்டிய முறைகள் இரண்டே இரண்டுதான். -

(அ) தான்ப ந்தைப் பிடித்த மூன்று விநாடிகளுக்குள், இலக்கை

நோக்கிக் குறிபார்த்து எறிந்துவிடவேண்டியது ஒரு முறை.

(ஆ) அல்லது, மூன்று விநாடிகளுக்குள் யாருக்கேனும்

ஒருவருக்குப் பந்தை அனுப்பி விளையாடவேண்டியது ஒருமுறை.

இதனை, ஆட்டக்காரர்கள் முக்கியமாக உணர வேண்டும்.

4.ஒரு ஆட்டக்காரர் தான் பந்தை பிடித்துக் கொண்டிருக்கிற அல்லது தன்வசம் பந்தை வைத்துக் கொண்டிருக்கிற பொழுது

(அ) பந்தைத் தரையில் உருட்டி அனுப்பக் கூடாது.

(ஆ) இலக்கை நோக்கி நேராகப் பந்தை எறிந்து, அதை வெற்றிகரமாக எறிய முடியாத நேரத்தில் அவரே அந்தப் பந்தை மீண்டும் பிடித்தாடலாம். ஆனல், மேற்கூறிய நிலையைத் தவிர, மற்ற சமயங்களில், தான் எறிந்த பந்தை, அடுத்த ஆட்டக்காரர் ஒருவர் தொட்டு விளையாடுவதற்கு முன்னர், தானே மீண்டும் ஆடக்கூடாது.

(இ) தானே பந்தை உயரத்தில் எறிந்து இன்னொரு ஆட்டக்காரர் தொடுவதற்கு முன்னர், மீண்டும் தானே பந்தை பிடித்தாடக்கூடாது. (ஈ) பந்தைக் கீழே விழச்செய்துவிட்டு, மீண்டும் தானே பந்தை பிடிக்கக் கூடாது. - - - - = -

(உ) இரண்டு முறை தானே தொடர்ந்தாற்போல் பந்தைத் தொட்டு விளையாடக் கூடாது என்பது இங்கு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

5. (அ) ஒரு ஆட்டக்காரர், வேண்டுமென்றே பந்தை காலால் உதைக்கக் கூடாது. - -

(ஆ) எதிர்க் குழுவைச் சேர்ந்த ஒரு ஆட்டக்காரர். பந்தைப் பிடித்து வைத்திருக்கும் பொழுது, பந்தின் மேல் ஒரு கையையோ அல்லது இரு கைகளையோ வைக்கக்கூடாது. -

(இ) மூடிய கைகளால் (முட்டியால்) பந்தைக் குத்தக் கூடாது. (ஈ) எதிராளியிடமிருந்து பந்தைப் பெற வேண்டும் என்பதற்காக, தன்னுடைய தேகத்தைப் பந்தின் மேல் விழச்செய்வது போல (அதாவது எதிராளியை இடித்து) பந்தைப் பிடிக்கக் கூடாது. உ) ஆட்ட நேரத்தில் தரையின் மேல் படுத்துக் கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ அல்லது முழங்கால் போட்டுக் கொண்டோ,