பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 - டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 201

பந்தைப் பிடித்து வைத்துக்கொள்வதோ அல்லது பந்தை எறிவதோ கூடாது. .

ஒரு ஆட்டக்காரர் பந்தைத் தான் பிடிக்கும் பொழுது, கீழே விழுந்துவிட்டால், பந்தைப் பிடித்துக் (பெற்றுக்) கொண்டாலும், பந்தைப் பிடித்துவிட்டநேரத்திலிருந்து,3விநாடிநேரத்திற்குள்ளாக, அதே சமயத்தில் விழுந்ததிலிருந்து எழுந்து அதன் பிறகே எறிய, வேண்டும். -

(ஊ) இலக்குக்கோட்டைக் கடந்துப்ோகின்ற பந்தை வெளியே செல்லாதவாறு தடுத்து நிறுத்துவதற்காக அல்லது தான் ஆட இயலாதவாறு சமநிலையை (Balance) இழந்துவிடுகிற நேரத்தில் சம நிலையைப் பெறுவதற்காகவும், இலக்குக் கம்பத்தை ஒரு ஆட்டக்காரர் பயன்படுத்திக் கொள்ளலாம். - -

6. பந்தைவழங்கி (pass) ஆடுகின்ற நேரத்தில்

(அ) பந்தை எறிந்து வழங்குபவர் கைகளுக்கும். பந்தைப் பிடிப்பவர் கைகளுக்கும் இடையே, மூன்றாவது ஆட்டக்காரர் ஒருவர் சென்றாடுவதற்கேற்ற இடைவெளி இடம் (Room) அமைந்திருக்க வேண்டும். - -

(ஆ) ஒரு ஆடும் திடலிலிருந்து (Third) மற்றொரு ஆடும் திடலுக்குள்ளே பந்து போவது போல எறியக்கூடாது. அவ்வாறு ஒரு திடலிலிருந்து, மற்றொரு திடலுக்குள் பந்து எறியப்படுவதற்கு முன், அந்தத் திடலில் ஏற்கெனவே நின்று கொண்டிருக்கிற மற்றொரு ஆட்டக்காரரால் அல்லது அந்தத்திடலுக்குள் கால் வைத்திருக்கின்ற ஒரு ஆட்டக்காரரால், அந்தப் பந்து தொடப்பட்டிருக்க வேண்டும். அல்லது தொட்டாடப்பட்டிருக்க வேண்டும். -

பந்து இருக்கின்ற திடலுக்குள், தனது முதல் காலை (சரியான) அந்தத்திடலின் பரப்பெல்லைக்குள் முழுமையாக வைத்துவிடுகின்ற ஒரு ஆட்டக்காரர், அந்தத் திடலில் ஆடப்பட்டுக் கொண்டிருக்கும் பந்தைப் பெற்று ஆடுவதற்குத் (Receive) தகுதியுள்ளவராகின்றார்.

அவ்வாறு அவர் பந்தைப் பிடித்துத் தொடர்ந்து ஆடும் எறியானது (Throw), அந்தத் திடலிலிருந்து முறையாக அனுப்பப்பட்டது என்றே கருதப்படும்.

தண்டனை: எந்த இடத்தில் விதி மீறல் (Infringement) நிகழ்கிறதோ, அந்த இடத்திலிருந்து தனி எறி வழங்கும் வாய்ப்பை, எதிர்க் குழுவினர் பெறுகின்றனர்.