பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

< டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 203

ஒரு தப்படி வைத்து (Step) உயரே தாவிக் குதிக்கும்போது, மீண்டும் ஏதாவது ஒரு கால் தரையைத் தொடுவதற்கு முன், ஒன்று - பந்தை எறிந்து வழங்க வேண்டும். அல்லது இலக்கை நோக்கிக் குறி பார்த்து எறிய வேண்டும். - -* * * -

2. இரண்டு கால்களும் தரையில் இருக்கும் போது அல்லது உயரே தாவிக் குதித்துப் பந்தைப் பிடித்து, மீண்டும் தரையில் குதிக்கும்போது, இரண்டு கால்களும் சமமாகப்படும்படிகீழே குதித்த பிறகு: - +,

(அ) ஏதாவது ஒரு காலை எந்தத் திசைப் பக்கமாகவேனும் வைத்து, மறுகாலை உயரே உயர்த்தி, அந்தக் கால் மீண்டும் தரையைத் தொடுவதற்கு முன், பந்தை எறிந்து வழங்க வேண்டும் அல்லது இலக்கை நோக்கிக் குறிபார்த்து எறிய வேண்டும்.

(ஆ) ஒரு காலை நிலைக் காலாக (Pivot) வைத்து, மற்றொரு காலை எந்தத் திசைப் பக்கமாகவேனும், எத்தனை முறையேனும் மாற்றி மாற்றி வைத்து இயங்கலாம். ஆனால், நிலையான காலை உயர்த்தி விட்டால், அது மீண்டும் தரையைத் தொடுவதற்கு முன் பந்தை எறிந்து வழங்க வேண்டும் அல்லது இலக்கை நோக்கிக் குறிபார்த்து எறிய வேண்டும். - -

(இ) இரண்டு கால்களும் தரையை உதைத்து எழுப்பிக் குதித்து மேலே தாவி விட்டால், ஏதாவது ஒரு கால் முதலில் தரையைத் தொடுவதற்கு முன், பந்தை எறிந்து வழங்க வேண்டும். அல்லது இலக்கை நோக்கிப் பந்தைக் குறிபார்த்து எறிய வேண்டும்.

(ஈ) ஏதாவது ஒரு காலை தரையில் உதைத்தெழும்பி, மேலே தாவிக் குதித்து, மீண்டும் ஏதாவது ஒரு கால் தரையைக் கீழிறங்கித் தொடுவதற்கு முன், பந்தை எறிந்து வழங்க வேண்டும் அல்லது இலக்கை நோக்கிக் குறிபார்த்து எறிய வேண்டும்.

ஊன்றியுள்ள நிலைக்காலை, இடம் மாற்றி இழுப்பதோ அல்லது நகர்த்துவதோ அல்லது தத்திக் குதிப்பதோ கூடாது. அது தவறாகும். தண்டனை தவறுக்குரிய தண்டனைய ாக, எதிர்க்குழு தனி எறி வழங்கும் வாய்ப்பினைப் பெறுகிறது. - . 3. வெற்றி எண் பெறும் முறைகள் .

(1) இலக்கு வட்டத்தைச் சுற்றியுள்ள கோடுகள் குறிப்பிட் டிருக்கும் இலக்கு வட்டத்திற்குள் எந்த இடத்திலிருந்தாவது, (கோடுகள் இலக்கு வட்டப் பரப்பில் இணைந்ததுதான்) இலக்குள் எறிபவர் அல்லது இலக்கினைத் தாக்குபவர் இருவரில் யாராவது