பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 விளையாட்டுக்களின் விதிகள் =

ஒருவர், குறிபார்த்து எறிந்தோ அல்லது தட்டிவிட்டோ செல்லும் பந்தானது, இலக்காகிய இரும்பு வளையத்தினுள் புகுந்து, அதனைத் தொடர்ந்து, வலை வழியாகக் கீழே வந்து விழுந்தால், அது, வெற்றி எண்பெற்றதாகக் கொள்ளப்படும் (Goal Scored).

(அ) மேலே கூறிய இருவரைத் தவிர, வேறு எந்த ஆட்டக் காரராவது, பந்து இரும்பு வளையத்தின் வழியாகப் புகுந்து வரும்படி எறிந்திருந்தாலும், அது இலக்கினுள் நுழைந்ததாக, வெற்றி எண் பெற்றதாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அத்துடன், ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.

(ஆ) இலக்கினை நோக்கி எறிகின்ற பந்தைத் தடுத்தாடும் குழுவிலுள்ளவர் தடுத்தாடிய போதும், அவர் தொட்ட பந்தானது இலக்கினுள் நுழைந்து, வலை வழியாக வெளிவந்தால், அது சரியானதாகும். அதற்கு வெற்றி எண் உண்டு.

(இ) நேரம் கடந்து விட்டது என்ற நடுவரின் விசில் ஒலிக்குப் பிறகு, எறியப்பட்டபந்தானது, இலக்கினுள் நுழைந்து, வெற்றிகரமாக வலை வழியாக வெளிவந்தாலும், அது ஏற்றுக் கொள்ளப்பட Lomo_Lng (No Goal).

இலக்கை நோக்கி எறியப்படுகிற எந்தப் பந்தும், எதிர்க் குழுவினரால் தடுக்கப்படலாம். -

(2) opsososo stolumsing (Penalty Shot) எறியப்படும்பொழுது, யாருடைய இடையீடும் (Intercept) இன்றி எறியப்பட வேண்டும். யாராலும் தடுக்கப்படக்கூடாது.

ஒறுநிலை எறி நிகழ்த்தப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பின், இடைவேளை நேரத்திற்காகவோ அல்லது நேரம் முடிந்து விட்டது என்று குறிப்பதற்காகவோ, நடுவரின் விசில் ஒலித்தாலும், ஒறுநிலை எறியானது, கட்டாயம் எடுக்கப்படவேண்டும். அல்லது நேரத்தைப் பற்றி கவனியாது, அந்த ஒறுநிலை எறியை எடுத்து முடித்தாக வேண்டும்.

- இலக்கினுள் குறிபார்த்து எறியும் ஒரு ஆட்டக்காரர்,

(அ) குறிபார்த்துப் பந்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் பொழுதோ அல்லது பந்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுதோ, அந்த இலக்கு வட்டத்திற்கு வெளியேயுள்ள தரையை மிதித்துக் கொண்டிருக்கக் கூடாது.

இலக்கை நோக்கிப் பார்த்துக் குனியும் பொழுதுகூட (Lean), இலக்கு வட்டத்திற்கு வெளியேயுள்ள தரையை மிதிக்கக் கூடாது.