பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=

216 . விளையாட்டுக்களின் விதிகள் e

6. பாடுதல்: எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் ‘கபடி” என்ற சொல்லைத் தெளிவாகக் கேட்குமாறு, சத்தமாக ஒரே மூச்சில் பாடப்படுகிற முறைக்கே பாடுதல் (Cant) என்று பெயர்.

7. பாடுவோர்: எதிர்க் குழுவினரின் பகுதிக்குப் பாடிக் கொண்டே செல்பவரைப் பாடுவோர் (Raider) என்பர். நடுக் கோட்டைத் தாண்டிய உடனே அவர் பாடத் தொடங்கிவிட வேண்டும். -i.

8. பிடிப்பவர் பாடப்படுகின்ற பகுதியில் உள்ள ஆட்டக்காரர் அத்தனை பேரும் பிடிப்பவர்களாவார்கள் (Anti-Raider or Anti).

9. பாட்டை விடுதல்: உரக்கத் தெளிவாகத் தொடர்ந்தாற் போல், ஒரே மூச்சில் பாடப்படுகின்ற ‘கபடி” என்ற சொல்லை நிறுத்துதல், அல்லது பாடிக் கொண்டிருக்கும் பொழுதே மூச்சை விட்டுவிட்டு, மறு மூச்சை இழுத்துக் கொள்ளுதலுக்குப் பாட்டை விடுதல் (Losing thecant) என்று பெயர். ஆரம்பித்தப் பாட்டை, ஒரே மூச்சில், அதையே தொடர்ந்து பாடி முடிக்க வேண்டும். - - 10. பிடிப்பவரை வெளியேற்றல்: பிடிப்பவரது உடலின் எந்தப் பாகத்தையாவது பாடிச் செல்வோர் விதிகளை மீறாமல் தொட்டாலும், அல்லது பாடிச் செல்பவரின் உடலின் எந்தப் பாகத்தையாவது பிடிப்பவர் தொட்டாலும், பிடிப்பவர் வெளியேற்றப் LGleums (Out).

11. பாடுவோரைப் பிடித்தல்: பிடிப்பவர்கள், விதிகளை மீறாமல், பாடிவருபவரை பிடித்துக் கொண்டு, அவரது பகுதிக்குச் செல்ல முடியாமல், பாடுகிற மூச்சை விடும்வரை தங்கள் பகுதியிலேயே நிறுத்தி வைத்துக் கொண்டால், அதுவே பாடுவோரைப் பிடித்தல் (To Holda Raider) என்பதாகும். -

= 12. தன் பகுதியைப் பத்திரமாக அடைதல்: பாடும் விதிகளை மீறாமல், பாடிச் செல்லும் பாடுவோர், நடுக்கோட்டைக் கடந்து தன்னுடைய பகுதிக்கு மூச்சுடன் வந்தாலும் அல்லது உடலின் எந்தப் பகுதியினாலாவது நடுக்கோட்டைக் கடந்து மூச்சுடன் தன்பகுதியைத் தொட்டாலும், பத்திரமாக தன் பகுதியை suffg. Goin (To Reach court safely) signCD கொள்ளப்படும்.

13. தொடுதல்: துணிகளை அல்லது துணிகளின் ஒரு பகுதியை அல்லது பாடுவோர் அல்லது பிடிப்பவர்களுடைய தனிப்பட்டஉடைமைகளைத் தொடுவதைத்தான் தொடுதல் (Touch) என்கிறோம். o -