பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 220 - -- . . . . விளையாட்டுக்களின் விதிகள் - - *Eo

கடந்து, உடலின் எந்த பகுதியினாலாவது பாடிவந்தவரின் பகுதியைத் தொடக்கூடாது. அவ்வாறு தொட்டவர் வெளியேற்றப்படுவார்.

16. 15-ஆவது விதியை மீறி, அடுத்தப் பகுதியைத் தொட்டவர், பாடி வந்தவரைப் பிடிப்பதும், ஆளைப் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அடுத்தப்பகுதியைத்தொடுவதும் அல்லது பிடிக்கும் தன் குழுவினருக்கு உதவும் சமயத்தில், அடுத்தப் பகுதியைத்தொடுவது போன்ற செயல்கள், பாடிவந்தவருக்குச்சாதகமான பலனையே தரும். இதனால் பாடி வந்தவர் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தார் என்று அறிவிக்கப்படுவதுடன், போராட்டத்தில் கலந்துகொண்டுபிடிக்கும் ஆட்டக்காரர்கள் அத்தனை பேரும் வெளியேற்றப்படுவார்கள்.

17.முறை மாறிச்செல்கின்ற பாடுவோரை அவரது பக்கத்திற்குச் செல்லுமாறு நடுவர் ஆணையிடுவார். அவ்வாறு பாடிக்கொண்டே உள்ளே சென்றது வேண்டுமென்றே நடந்தது என்று நடுவர் கருதினால், பாடி வந்தவரது குழுவை ஒரு முறை எச்சரித்துவிட்டு, எதிர்க் குழுவினருக்கு 1 வெற்றி எண்ணை அளிப்பார்.

18. எதிர்க்குழுவில் உள்ள எல்லா ஆட்டக்காரர்களையும் தொட்டு வெளியேற்றிய HI, ஒவ்வொரு ஆட்டக்காரரையும் வெளியேற்றியதற்காக ஒவ்வொரு வெற்றி எண்பெற்ற பின், லோனா (Lona) என்ற பெயரில் 2 வெற்றி எண்களை மிகுதியாகப் பெறும். பிறகு, எல்லா ஆட்டக்காரர்களும் அவரவர் குழுவில் சேர்ந்து கொண்டு, அவரவர் பகுதிக்கு (Court) 10 வினாடிகளுக்குள் நுழைந்துவிட, ஆட்டம் மீண்டும் தொடரும்.

19. ஒரு பாடுபவர் அபாயம் நிறைந்த ஆட்டத்திற்காக எச்சரிக்கப்பட்டால், அவரின் எதிர்க்குழுவுக்கு 1 வெற்றி எண்ணை நடுவர் அளிப்பார். - - *

20. கால்களையும், இடுப்பையும், கைகளையும் தவிர, உடலில். வேறு எந்த பாகத்தையும் பாடிவருபவர் அல்லது பிடிப்பவர் பிடிக்கக் கூடாது.இந்த விதியை மீறும் ஒருவர் உடனே வெளியேற்றப்படுவார். மேற்சொன்னதைத் தவிர, பாடி வருபவர் வேறு பகுதிகளில் பிடிக்கப்பட்டாலும், அவரின் பக்கத்துக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தார் என்று நடுவர் அறிவித்து விடுவார்.

21. ஆடும் நேரத்தில், மற்ற ஆட்டக்காரர்கள் எல்லாம். வெளியேற்றப்பட்டு, ஒன்று அல்லது இரண்டு பேர்கள் மட்டுமே தன் குழுவில் இருக்கும் பொழுது எல்லா ஆட்டக்காரர்களையும் ஆடுவதற்கு ஆடுகளத்தினுள்ளே கொண்டு வருவதற்கு ஒரு குழுத் தலைவன் விரும்பினால், எஞ்சியுள்ள அவர்களும் வெளியேற்றப் பட்டதாகத்தானே அறிவித்துவிட்டு, எல்லோரையும் சேர்த்துக்