பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

cos- டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 221

கொள்வார். அப்பொழுது, ஆடுவதிலிருந்து பின் வாங்கிய ஆட்டக்காரர்கள் அத்தனை பேருக்குமாக ஒவ்வொரு வெற்றி எண் கிடைப்பதுடன், இறுதியில் 2 வெற்றி எண்கள் எதிர்க்குழுவிற்குக் கிடைக்கிறது (Lona).

22. வெளியேற்றப்பட்ட ஒரு ஆட்டக்காரர் உள்ளே வர வேண்டுமானால், எதிர்க்குழுவினர் ஒருவர் வெளியேற்றப்படும் பொழுது, தன் குழுவிலுள்ள வெளியேற்றப்பட்டவர்களின் வரிசை ஒழுங்கில்(Same Order)தான் வர வேண்டும். -

4.போட்டி ஆட்டத்திற்குரியவிதிகள் 1.12 ஆட்டக்காரர்களைக் கொண்டது ஒரு குழுவாகும். அதில் ஒரே நேரத்தில் ஆடுகளத்தினுள் இறங்கி விளையாடுபவர்கள்-7

ஆட்டக்காரர்கள் மட்டுமே. மற்ற5 பேர்களும் மாற்றாட்டக்காரர்களாக

இருப்பார்கள். -

2. பருவம் (Hall) ஒன்றுக்கு 20 நிழிடமாக இரு பருவங்கள்

ஆண்களுக்கும்; (20 நி-5.நி-20 நி) பருவம் ஒன்றுக்கு 15 நிமிடமாக, இரு பருவங்கள் பெண்களுக்கும் (15 நி-5 நி - 15 நி) 50 கிலோ

கிராம் எடைக்குக் குறைந்த ஆண்களுக்கும் போட்டி ஆட்டத்தில்

ஆடும் நேரம் உண்டு.

முதற் பருவத்திற்கும் இரண்டாவது பருவத்திற்கும் இடையே5

நிமிட நேரம் இடைவேளையுண்டு. இடைவேளைக்குப் பிறகு குழுக்கள் இரண்டும் ஆடுகளப் பக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். - -

3. ஒரு குழு எதிராளி ஒருவரைத்தொட்டோ அல்லது பிடித்தோ வெளியேற்றும்பொழுது, ஒரு வெற்றி எண்ணைப் பெறும். லோனாவைப் பெறுகின்ற குழு, அந்த லோனாவுக்காக 2 வெற்றி எண்களை மிகுதியாகப் பெறுகின்றன. -

4. ஆட்ட இறுதியில், அதிகமான வெற்றி எண்களைப் பெற்றிருக்கின்ற குழுவே, வெற்றி பெற்றதாகும்.

5. ஆட்ட இறுதியில், இரு குழுக்களும் சம வெற்றி எண்கள் பெற்றிருந்தால், 5 நிமிடங்கள் கொண்ட இரு மிகை நேரப் பருவங்களை (Extra period) ஆட வேண்டும். அவ்வாறு ஆடும் பொழுது, இரண்டாவது பருவத்தின் முடிவிலே இருந்த ஆட்டக்காரர்களைக் கொண்டுதான் மிகை நேரப் பருவத்தின் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

8.ஆண்களுக்குரியபோட்டிஆட்டத்தில்,50 நிமிடங்கள்ஆடிய பிறகும் கூட (பெண்களுக்குரிய போட்டியில் 40 நிமிடம் ஆடியும்