பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 விளையாட்டுக்களின் விதிகள் *ES

கூட) ஆட்ட முடிவில் எந்தக் குழுவும் வெற்றி எண்கள் பெற்றிருக்காவிடில், ஆட்டம் முதன் முதலாகத் தொடங்கிய பிறகு, முதல் வெற்றி எண்ணை எடுத்திருக்கும் குழுவே (Firsteading point) ஆட்டத் தொடக்கத்திற்காக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். .. இது முடிவாட்ட முறைக்கான (Knock-out) போட்டிக்குரிய

விதியாகும். -

7. Ogni gri-L Gumi lsts (League system): Gumi l. ஆட்டத்தில் வெற்றிபெறுகிற குழு2வெற்றி எண்களையும், தோற்றக் குழு 0 வெற்றி எண்ணையும் பெறும்.

இரு குழுக்களும் வெற்றி தோல்வியின்றி சமமாக இருந்தால், ஒவ்வொரு குழுவும் 1வெற்றி எண்ணைப் பெறும்.

இவ்வாறு பெறுகிற வெற்றி எண்களால், போட்டி முடிவில் சமமான எண்ணிக்கையை (Tie) ஒரு குழு அல்லது பல குழுக்கள் பெற்றிருந்தால், அந்தப் போட்டி ஆட்டத்தை சீட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுத்து, முடிவாட்ட முறையின் அடிப்படையில், அவைகளுக்கிடையே ஆடச் செய்து முடிவு காண வேண்டும்.

8. விளையாடுவதற்கேற்ற வெளிச்சம் இல்லாது போனாலும் (Failure of light) பெருத்த மழை அல்லது வேறு பல இயற்கைக் கோளாறுகளாலும் ஒரு போட்டி ஆட்டம் முடிவு பெறாது நின்று போனாலும், அதுபோன்ற போட்டி ஆட்டங்கள் திரும்பவும் ஆடப் பெறுதல் வேண்டும் (Replay).

ஒரு சிறிது நேரத்திற்குத்தான் ஆட்டம் நிறுத்தப்பட்டிருந்தது என்ற நிலையில், தொடர்ந்து ஆட்டத்தை நடத்தி முடிக்கக்கூடிய சூழ்நிலை அமைந்தால், தொடர்ந்து ஆட்டத்தை நடத்தி முடித்துவிட வேண்டும்.

அவரவர்க்குரிய ஆடும் எண்ணை (Number) குறைந்தது 4 அங்குல நீளம் உள்ளதாக, முன்னும் பின்னும் எல்லா ஆட்டக் காரர்களும் அணிந்திருக்க வேண்டும். ஆட்டக்காரர்கள் குறைந்த அளவு அணியவேண்டிய உடை- பனியன், லங்கோடு அல்லது ஜட்டி உள்ளே அணிந்திருக்க, 1 கால் சட்டை -

உடம்புக்கு அல்லது கைகளுக்கு எண்ணெய் அல்லது மிருதுவான திரவப் பதார்த்தத்தைத் தடவிக் கொள்வது கூடாது. எந்தவிதமான உலோகத்தாலான பொருட்களையும் அணியக்கூடாது. தேவையானால், சாதாரண ரப்பரால் அடிப்பாகம் கொண்டடென்னிஸ் காலணிகளையும், காலுறைகளையும் (Socks) அணிந்து கொள்ளலாம். -