பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 223

13. ஆட்ட நேரத்தில் குழுத் தலைவன் அல்லது குழுவை நடத்துபவரைத் தவிர எந்த ஆட்டக்காரர்களும் குறிப்பு உரைகளைத் (Instruct) தரக்கூடாது. தன்னுடைய பகுதியில், குழுத் தலைவன் மட்டுமே தனது ஆட்டக்காரர்களுடன் பேசலாம்.

14. காயம்பட்ட நேரத்தில், நடுவர் கொடுக்கின்ற ஓய்வு நேரத்தின் அளவை, மீதி இருக்கும் நேரத்தோடு சேர்த்து, ஆட்டத்தை முழு நேரமும் நடந்து முடியுமாறு நடுவர் செய்ய வேண்டும்.

5. ஆட்ட அதிகாரிகள் 1. நடுவர்களின் கடமை - : -

1. ஒரு நடுவர், இரண்டு துணை நடுவர்கள், இரண்டு கோடு

காப்பாளர்கள், ஒரு குறிப்பாளர் ஆகியோர் ஆட்டத்தை நடத்தும் அதிகாரிகளாகப் பணியாற்றுவர். -

2. ஆடுகளத்தினுள், துணை நடுவரின் (Umpire) முடிவே முடிவானது.ஆயினும் சில இன்றியமையாத நேரங்களில், இரு துணை நடுவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்படும்பொழுது, ஆட்ட நலனை உத்தேசித்து, நடுவர் அந்த முடிவை மாற்றிவிட அதிகாரம்

3. ஒரு ஆட்டக்காரரை எச்சரிக்கை செய்யும், அன்னாருக் கெதிராக வெற்றி எண்களைத் தரவும், அல்லது அவரை ஆட்டத்திலிருந்து நீக்கவும், பெருந்தன்மையற்ற நடத்தைக்கும் அல்லது கீழே கண்ட குற்றங்களைச் செய்யும் குழுவைக் கண்டிக்கவும், நடுவருக்கு முழு அதிகாரம் உண்டு. -” (அ) நடுவர்கள் எடுத்த முடிவிற்கெதிராக அது பற்றி அவர்களிடம் பிடிவாதமாக அறிவுறுத்தல் (Address)

(ஆ) நடுவர்களைப் பற்றியும் அல்லது அவர்கள் எடுத்த முடிவைப் பற்றியும் அருவெறுக்கத்தக்க முறையில் புறங்கூறல்.

(இ) பண்புகெட்ட கீழான முறையில் நடுவர்களிடம் நடந்து கொள்ளுதல் அல்லது அவர்கள் எடுத்த முடிவிற்கெதிராக வெறுப்பைக் காட்டுதல். -- o -

(ஈ) தனிப்பட்ட முறையில், தரக்குறைவாக எதிராளியைப் பற்றிப் பேசுதல், அத்துடன் அவர்களிடம் அவ்வாறு நடந்து கொள்ளுதல். - - - . தவறுகள்: (அ) வாயைப் பொத்தியோ அல்லது தொண்டையை அழுத்தியோ அல்லது வேறு எந்த வழியிலாவது, பாடி வருபவரின் மூச்சை அடக்க ஒரு ஆட்டக்காரர் முயலுதல்;