பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 21

ஆடுகளத்தினுள் வந்து விழுந்தாலும், அது ஆடுகளத்தை விட்டுவிட்டு வெளியே சென்றதாகத்தான் கொள்ளப்படும்.

பக்கக் கோடுகள், இலக்குக் கோடுகள் அனைத்தும் ஆடுகளத்தின் பகுதிகளாகவே இருக்கின்றன. ஆடுகளத்தின் பகுதிகளைக் குறிக்கும் கோடுகளும் அந்தந்தப் பகுதிகளின் பாகங்களே.

4. வெற்றி எண் பெறும் முறை (Goal)

விதிகளின்படி இலக்குக் கம்பங்களுக்கிடையே, குறுக்குக் கம்பத்திற்குக் கீழே, கடைக்கோட்டைத் தாண்டி பந்து முழுவதும் உருண்டு சென்றால், அது வெற்றி எண்ணைத் தரும் (Goal). அவ்வாறு பந்தை இலக்கினுள்செலுத்தும்பொழுது, கையால் பந்தைத் தள்ளுவதோ, எறிவதோ, ஏந்திச் செல்வதோ கூடாது.

கடைக்கோட்டைத் தாண்டி இலக்கினுள் பந்து செல்லும் நேரத்தில், ஏதோ காரணத்தால் குறுக்குக் கம்பம் இடம் பெயர்ந்து விட்டால், குறுக்குக் கம்பம் இருந்திருந்தால் கட்டாயம் அதன் கீழ் பந்து சென்றிருக்கும் என்று நடுவர் கருதினால், பந்தை அடித்தக் குழுவுக்கு வெற்றி எண்களை அவர் அளிக்கலாம்.

ஆட்ட நேரத்தில் அதிகமான வெற்றி எண்களைப் பெறுகிற குழுவே வெற்றிபெற்றதாகும். இரு குழுக்களும் வெற்றி எண்களைப் பெறாத பொழுது (No Goals) அல்லது சமமான வெற்றி எண்களைப் பெற்ற பொழுதும், ஆட்டம் சமமாக முடிந்ததென்று அறிவிக்கப்படும். முழங்கால் கணுக்கால்களுக்கிடையில் பந்தை ஏந்திக் கொண்டு இலக்கினுள் சென்று வெற்றி எண்ணைப் பெறலாம்.

குறியுதையால், நேரே பந்தை உதைத்து இலக்கினுள் தள்ளி வெற்றி எண்ணைப் பெற முடியாது. ஆனால், நிலை உதை மூலமாக பந்தை எதிர்க்குழுவின் இலக்கிற்குள் உதைத்து, வெற்றி எண்ணைப் பெற முடியும். (புதிய விதி)

இலக்கில் உள்ள கடைக்கோட்டைத் தாண்டி உள்ளே பந்து முழுவதும் செல்லும் முன், ஒரு பார்வையாளர் வந்து பந்தைத் தடுப்பதற்கு முயன்று, அதில் அவர் தோற்றுப் போய் பந்து இலக்கினுள் சென்றுவிட்டால் அது வெற்றி எண் தான்.

அவ்வாறு பந்து உள்ளே செல்வதற்கு முன் ஒருவர் வந்து தடுத்துவிட்டால, ஒறுநிலை உதையைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் ஆட்டத்தை உடனே நிறுத்தி, தவறு நடந்த இடத்தில்