பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**

. நடு க்கோடு.)

232 விளையாட்டுக்களின் விதிகள்

குறிப்பு: காலில் ஏதாவது ஒரு பாகம் ஆடுகள எல்லைக் குள்ளான தரையைத் தொட்டுக் கொண்டிருந்தாலும், அவரது கால்கள் வெளியே படவில்லை என்றே கூறப்படும். எல்லைக்கு வெளியே கீழே படாமல், தரைக்கு மேலே (in the air) உடம்பு முழுவதும் இருந்தாலும், கால் வெளியே படவில்லை என்றே கொள்ளப்படும்.

18. எல்லைகளைக் குறிக்கிற கோடுகள் எல்லாம் குறைந்தது 3 சென்டிமீட்டர் அளவிலேதான் குறிக்கப்படவேண்டும்.

19. நுழைதல் (Entry): ஆடுகள வெளிப் பகுதியில் இருந்து, ஆடுகள உட்புறத்தில் காலடி வைத்ததுமே, அவர் ஆடுகளத்தில் நுழைந்ததாகவே கருதப்படுவார். -

3. விளையாடும் முறைகள்

1. படத்தில் காட்டியுள்ளபடி, ஆடுகளத்தின் அமைப்பு இருக்க வேண்டும். -

2. சுண்டியெறிந்த நாணயத்தில் வெற்றிபெற்ற ஒரு குழுத்தலைவன், தனக்குத் தேவையானது ஓடுவதா அல்லது விரட்டுவதா, என்பதைத் தெரிந்தெடுத்து, நடுவரிடம் கூற வேண்டும்.

குறிப்பு: நாணயம் சுண்டுதலில் வெற்றி பெற்ற குழுத் தலைவன், உடனே தனது ஒரு கையை மேலே உயர்த்திவிட்டு, பிறகு தனது சுண்டு விரலால், மையக்கோட்டையோ அல்லது பக்கக் கோட்டையோ சுட்டிக் காட்ட வேண்டும். மையக்கோடு என்றால்

விரட்டுவது. பக்கக்கோடு என்றால் ஓடுவதைக் குறிக்கும்.

ஓடி விரட்டுவோரில் ஒருவரைத் தவிர, மற்ற 8 பேர்களும் ஒவ்வொரு சதுரக் கட்டத்தினுள் உட்காரவேண்டும். சேர்ந்தாற்போல் அவர்களில் இருவர், ஒரேதிசையை நோக்கிக் கொண்டிருப்பதுபோல் உட்காரக் கூடாது. ஒன்பதாவது ஆட்டக்காரர் (ஓடி விரட்டுவோர்) விரட்டுவதைத் தொடங்குவதற்காக, ஏதாவது ஒரு கம்பத்தின் அருகில் நிற்க வேண்டும். - -

- 3. : விரட்டுவோரின் உடலில் எந்தப் பகுதியாவது,

நடுக்கோட்டையோ அல்லது அதைக் கடந்தோ மறுபுறம் தரையைத்

தொடக் கூடாது. கம்பங்களுக்கு உட்புறமாக அமைந்துள்ள நடுக்கோட்டை ஓடி விரட்டுவோன் கடக்கவே கூடாது. (அதாவது உட்கார்ந்திருப்பவருக்கும் கம்பத்திற்கும் இடையில் உள்ள