பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 விளையாட்டுக்களின் விதிகள் =

2. (அ) “ஒரு முறை ஆட்டம் (mings) என்பது ஒரு முறை ஓடுகிற வாய்ப்பும் (Running Turn), ஒருமுறை விரட்டுகிற வாய்ப்பும் (Chasing turn) கொண்டதாகும். ஒவ்வொரு வாய்ப்புக்கும் 9 நிமிடங்கள் உண்டு. ஒவ்வொரு முறை ஆட்டத்திற்கும் இடையில் உள்ள ஓய்வு நேரம் 9 நிமிடங்களாகும். ஒவ்வொரு போட்டி ஆட்டத்திலும் (Match) இரண்டு முறை ஆட்டங்கள் உண்டு. (இளஞ்சிறார்கள் ஆட்டத்திற்கு 7 நிமிடங்கள் உண்டு.)

(ஆ) ஆட்டக்காரர்கள், தாங்கள் ஆடுகின்ற வரிசைப்படி குறிப்பாளரிடம் கூறி, பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆட்டம் தொடங்கியவுடன், தங்களுக்குவாய்ப்பு வரும் நேரத்தில், முதல் மூவர் (First 3) ஆடும் எல்லைக்குள் நுழைய வேண்டும். அவர்கள் தொடப்பட்டு வெளியேற்றப்பட்டவுடன், அடுத்த மூவர் (Next Three) கோ கொடுப்பதற்கு முன்பே உள்ளே வராமல் இருந்தால், அவர்கள் வெளியேற்றப்பட்டதாக (Out) அறிவிக்கப்படுவார்கள். ஓடும் வரிசை மாறிவரும் ஒட்டக்காரர் களையும் வெளியேற்றியதாக அறிவிக்கப்படும். அந்த ஆடும் வாய்ப்பு (turn) முடியும் வரைக்கும், இந்த முறை தொடர்ந்திருக்கும். மூன்றாவது ஒட்டக்காரரைத் தொட்டு வெளியேற்றிய “ஓடி விரட்டுவோன் புதிதாக வரும் ஒட்டக்காரர்களை விரட்டக்கூடாது. அவர் உடனே ‘கோ’ கொடுத்துவிட்டு உட்கார்ந்து விடவேண்டும். (மூன்றாவது ஒட்டக்காரர் என்பவர் ஒவ்வொரு முறை நுழையும் 3 தற்காப்பு ஒட்டக்காரர்களில் வெளியேறாமல் கடைசியாக இருப்பவர்) ஒவ்வொரு குழுவும் தனது தற்காப்பு ஒட்டக்காரர்களை ஆடுகளத்தின் ஒரு பக்கத்திலிருந்தே அனுப்ப வேண்டும். - - 3.ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஆடும் வாய்ப்பை முடித்துக் கொள்ள விரட்டுபவருக்கோ அல்லது ஓடுபவருக்கோ உரிமையுண்டு. ஓடுபவர் அல்லது விரட்டுபவரின் குழுத்தலைவன் இதைப்பற்றி நடுவரிடம் தெரிவித்து, ஆட்டத்தை நிறுத்த வேண்டி விண்ணப்பித்துக் கொண்டு, தங்களின் ‘ஆடும் வாய்ப்பு’ முடிந்துவிட்டதென்பதை அறிவித்து விட வேண்டும். இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட உடனேயே, ஆடும் வாய்ப்பு முடிந்ததென்று கூறி, ஆட்டத்தை, நடுவர்நிறுத்திவிடுவார். ஆட்டம் முடிவுபெற்றதென்று நடுவர் சைகை கொடுக்கும்வரை, அந்த ஆடும் வாய்ப்பு முடிவு பெறுவதில்லை. ஒவ்வொரு முறை ஆட்டத்திற்கிடையே (Inning)9 நிமிடம் இடைவேளையும் ஒவ்வொரு ஆடும் வாய்ப்புக்கிடையே 5 நிமிட இடைவேளையும் உண்டு. இளஞ்சிறார்களுக்கு முறையே 6 நிமிடமும், 3 நிமிடமும் உண்டு.