பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 239

5. நடுவர்க்குரிய கடமைகள்

இரண்டு துணை நடுவர்கள், 1 நடுவர், 1 நேரக்காப்பாளர், 1 குறிப்பாளர் ஆகியோர் ஆட்டத்தை நடத்திக் கொடுக்கும் அதிகாரிகளாகப் பணியாற்றுவார். துணை நடுவர்கள் (Umpires): -

ஆடுதற்கேற்ற ஆடுகளத்தின் வெளிப்புறம் ஒட்டியுள்ள தொடரிடத்தில் (Lobby), ஒரு துணை நடுவர் நின்று கொள்வார். நடுக்கோட்டால் பிரிக்கப்பட்டுள்ள ஒரு பகுதியைத் தனது கண்காணிப்பின் கீழ் வைத்துக் கொண்டு ஆட்டத்தைக் கண்காணிப்பார். தொடரிடத்தில் இங்குமங்குமாகச் சென்று, விரட்டுவோர் ஓடுவோர் செயல்களையும் கவனிப்பார். தன்னுடைய பகுதியில் நடப்பவைகளுக்குச்சரியான முடிவுகூறுவதோடல்லாமல், அடுத்தப் பகுதியில் நடப்பவைகளுக்கும் நல்ல முடிவை எடுக்க, மற்றத் துணை நடுவருக்கும் உதவி செய்வார். விரட்டுவோரின் தவறைச் சுட்டிக்காட்டுவதுடன் நில்லாமல், அவரை விதிகளின்படி செயல்படத் தூண்டுவார். தொடர்ந்த மெல்லிய ஒலியால் (Whistle) தவறை வெளிப்படுத்திக்காட்டி, அந்தத் தவறு நிவர்த்திக்கப்படும் வரை, நடுவரின் விசில் நீடிக்கும். மெல்லிய விசில் ஒலியால் வெளியேற்றப்படுதல் (out) அறிவிக்கப்படும்.

நடுவர் (Referee): கீழ்காணும் கடமைகளை நடுவர் ஆற்றுவார்.

(அ) துணை நடுவர்கள் தங்களுடைய கடமைகளை இனிது நிறைவேற்ற இவர் உதவி செய்வதுடன், அவர்கள் இருவருக்கு மிடையில், கருத்து முரண்பாடு ஏதாவது எழும்போது, தன்னுடைய இறுதி முடிவையும் தெரிவிப்பார்.

(ஆ) ஆட்டம் நடைபெறுவதை வேண்டுமென்றே தடை

செய்வதும்; பண்புகெட்ட முறையில் நடந்து கொள்வதும், அல்லது குறும்புத்தனமான செய்கைகளில் ஈடுபடுவதும், அல்லது வேண்டுமென்றே விதிகளை மீறுகிற ஒரு ஆட்டக்காரரை, நடுவர் தனது முடிவின்படி தண்டிக்கலாம். அவரது முடிவுக்கேற்றபடி, தண்டனை அமையும். அவரைக் குழுவிலிருந்து விலக்குவதோடு அல்லாது, இனி ஆடும் ஆட்டத்திலும் பங்கு பெறாமல் இருக்கவும் தடை விதிக்கலாம். = -

(இ) விதிகளில் ஏற்பட்ட ஐயத்தை விளக்குமாறு ஏதேனும் வினாக்கள் எழுந்தால், நடுவர் அவரது முடிவைக் கூறுவார்.