பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

co- டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 245

பகுதிகள் உண்டாகின்றன. i ன் - வலப்பகுதி sy@ssmb (Rightcourt) என்றும், மற்றொன்று இடப்பகுதி ஆடுகளம் (Letcourt) என்றும்பெயர் பெறும்.

o

ஒவ்வொரு கடைக்கோடும், மையப்பகுதியில், 10 சென்டி மீட்டர் (4 அங்குலம்) கோடு ஒன்றால், ஆடுகளத்தின் உட்புறத்தில் குறித்திருக்க, அதுவே சர்வீஸ் போடுவதற்கான மையக் குறிப்புள்ளியாக அமைகிறது. - -

மற்ற எல்லாக் கோடுகளும் 2.5 சென்டி மீட்டருக்குக் (1 அங்குலம்) குறையாமலும் 5 சென்டி மீட்டருக்கு (2 அங்குலம்) அதிகமாகாமலும், உள்ள அகலத்துடன் குறிக்கப்பட வேண்டும். கடைக்கோடுகள் மட்டும் 10 சென்டி மீட்டர் அகலத்தில் (4 அங்குலம்) ஆடுகள அளவுக்குரிய எல்லையின் வெளிப்புறத்தில் தான் குறிக்கப்படவேண்டும். -

குறிப்பு: அகில உலக டென்னிஸ் போட்டிகள் (டேவிஸ் கோப்பை) மற்றும் அதிகார பூர்வமான அகில உலகப் போட்டிகள் நடைபெறுகிறபோது, கடைக்கோட்டிலிருந்து 6.4 மீட்டருக்கும் (21 அடி). பக்கக்கோட்டிலிருந்து 3.66 மீட்டருக்கும் (12 அடி) குறையாத இடைவெளிப் பரப்பானது இடைஞ்சல் இல்லாது இருப்பதுபோல, ஆடுகளத்தை அமைத்திருக்க வேண்டும்.

2:ஆடுகளத்தில் பயன்படும் நிரந்தர சாதனங்கள் * . . . . . . வலை, வலைக்கம்பம், ஒற்றையர் ஆட்ட எல்லையைக் குறிக்கும் கம்புகள், வலைக் கம்பிகள்,வலையை இழுத்துக் கட்டும் பட்டைகள், நாடாக்கள் மட்டுந்தான் என்பதில்லை.

ஆடுகளத்தில் பின்புறத் தடுப்புகள், இருக்கைகள், நகர்த்தி இடம் பெறவைக்கும் தன்மையுள்ள நாற்காலிகள், ஆடுகளத்தைச் சுற்றி இருத்தல் வேண்டும். நடுவர் அமர்ந்திருக்கும் உயர்ந்த இருக்கை, வலை நடுவர், கோடு கண்காணிக்கும் நடுவர், கோடு கண்காணிப்பாளர்கள், பந்துப் பையன்கள் போன்றோருக்குரிய இடங்கள், எல்லா வசதிகளுடன் அமைந்திருக்குமாறு பார்த்தக் கொள்ள வேண்டும். -

குறிப்பு: நடுவர் என்ற சொல், வலைக்குப் பக்கத்தில் உள்ள உயர்ந்த இருக்கையில் அமர்ந்த, போட்டியை நடத்துகிற நடுவர் என்றும், நடுவருக்கு உதவியாக இருந்து போட்டியை நடத்திக் கொடுக்கிற மற்றவர்களையும் குறிக்கும்.